Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2023 19:20:52 Hours

மினுஸ்மா ஐ.நா. பணிக்கு 5 வது இராணுவக் குழு புறப்படத் தயார்

இலங்கை இராணுவத்தின் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்கான 5 வது குழு தயார் நிலையில் உள்ளது. மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் பணிக்கு (மினுஸ்மா) அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் வெள்ளிக்கிழமை (23) அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையணி அணிவகுப்பு மைதானத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு சம்பிரதாய மரியாதையை வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு பிரதான நுலைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்க படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

இராணுவத் தளபதியை படையணியின் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் சென்றதன் பின்னர், அவர் சார்பாக வழங்கப்பட்ட சம்பிரதாய அணிவகுப்பை மறுபரிசீலனை செய்தார் அதற்கமைய அவருக்கு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவத் தளபதி இராணுவ சம்பிரதயங்களுக்கு அமைய மரியாதை செலுத்தினார்.

அடுத்ததாக, இலங்கை இராணுவத்தின் ஐ.நா. பணிக்கு அடையாள முக்கியத்துவத்தைச் குறிக்கும் வகையில் அன்றைய பிரதம அதிதி தேசியக் கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி, இராணுவக் கொடி மற்றும் இலங்கை சிங்கப் படையணியின் கொடியை மாலி நோக்கி செல்லும் 5 வது இலங்கை அமைதிகாக்கும் படை குழுவின் தளபதியிடம் கையளித்தார்.

5 வது இலங்கை அமைதிகாக்கும் படையில் இலங்கை கவச வாகன படையணி, இலங்கை பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இலங்கை சிங்க படையணி, இயந்திரவியற் காலாட் படையணி, பொறியியில் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இலங்கை இராணுவ ஆயுதப் படையணி, இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ பொது சேவை படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளடங்கியிருப்பததுடன் இலங்கை சிங்க படையணியின் அதிகலவான படையினர் உள்ளடங்குகின்றனர்.

இலங்கை சிங்க படையணியின் கேணல் டபிள்யூடபிள்யூஎன்பீ விக்கிரமாராச்சி அவர்கள் 5 வது இலங்கை அமைதிகாக்கும் படையில் தளபதியாகவும், இரண்டாம் கட்டளைத் அதிகாரியாக இலங்கை கவச வாகன படையணியின் மேஜர் எம்ஏடி பண்டாரநாயக்கவும் பணியாற்றுகின்றனர். இதில் 20 அதிகாரிகள் மற்றும் 223 சிப்பாய்கள் உள்ளடங்களாக மொத்தம் 243 கொண்டுள்ளது.

சம்பிரதாய அணிவகுப்பு முடிந்தவுடன் இராணுவத் தளபதி அமைதிகாக்கும் படையில் இல் இராணுவத்திற்கும் பொதுவாக இலங்கைக்கும் வெளிநாட்டு பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் மாலியில் உள்ள அனைத்து படையினர்களும் உயர்தர ஒழுக்கத்தைப் பேணுமாறும், தேசியமாகத் தேவைப்படும் அந்நியச் செலாவணி வீட்டிகும் தேவை என்பதையும் குறிப்பிட்டார்.

தளபதியின் உரையின் பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் படையினர்களுடன் உரையாடியதோடு, அவர்களுடன் சில யோசனைகளைப் பகிர்ந்துகொண்டார். அனைத்துத் படையினர்களும், அழைப்பாளர்களும் தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். இலங்கை இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்க படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பி ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

பின்னர், நினைவுகளைச் சேர்கும் வகையில் 5 வது இலங்கை அமைதிகாக்கும் படையின் தளபதியுடன் பிரதம அதிதி குழு படத்தில் இணைந்துகொண்டார். இராணுவத் தளபதி வெளியேறுவதற்கு முன், படையணி தலைமையகத்தில் உள்ள இலங்கை சிங்க படையணியின் அதீதி பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

மாலியில் அமைதிகாக்கும் படையின் ஒருங்கிணைந்த மினுஸ்மா சேவையில் ஏற்கனவே பணியாற்றி வரும் 4 வது அமைதிகாக்கும் படை ஜூலை 1 ஆம் திகதி புதிய 5 வது அமைதிகாக்கும் படையின் குழுவுக்கு தங்கள் கடமைகளை கையளித்த பின்னர் விரைவில் நாடு திரும்ப உள்ளது என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ, இராணுவ வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பிஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்சிசி, காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபிஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சிப்பாய்கள் உட்பட குழு உறுப்பினர்களின் உறவினர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.