Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd June 2023 22:08:41 Hours

ஹல்துமுல்ல, அமிலகம மாணவர்களுக்கு இராணுவத்தின் உதவிகள்

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் பரிந்துரையின்படி மத்திய பாதுகாப்புப் படையினர் ஹல்துமுல்ல, அமிலகம பிரதேசத்தின் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் 63 மாணவர்களுக்கு சனிக்கிழமை (ஜூன் 17) பாடசாலை காலணிகள் மற்றும் எழுதுபொருட்கள் விநியோகிப்பதற்கான சமூகத் நலதிட்டத்தை முன்னெடுத்தனர்.

ஹல்துமுல்ல அமிலகம கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 1 - 5 இல் கல்வி கற்கும் 63 மாணவர்களுக்கு 4,000.00ம் ரூபா பெறுமதியான பாடசாலைக் காலணிகளும் 50,000.00ம் ரூபா பெறுமதியான எழுதுபொருட்களும் மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களினால் வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் தென் கரோலினா புதிய தென் வேல்ஸ் மருத்துவமனையின் ஆலோசகரும் இயக்குனருமான திருமதி (டாக்டர்) மலிகா ஜெயசூரியா, 'நெத்' எஃப்எம் வானொலி ஒலிபரப்பாளர்களுடன் இணைந்து இராணுவத்திற்கு வழங்கிய அன்பான அனுசரணையுடன் மத்திய பாதுகாப்புப் படையினரின் ஒருங்கிணைப்பு மூலம் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில், மத்திய பாதுகாப்புப் படையினர் மாணவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினர்.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், திருமதி (டாக்டர்) மலிகா ஜயசூரிய, ‘நெத் எப்எம்’ வானொலி அலைவரிசையின் பணிப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்பாளர்கள், ஆசிரியர்கள், அவரது பயிற்சிப் பணியாளர்கள், சி்பாய்கள், மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.