Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th June 2023 19:39:20 Hours

தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் படையினர் கொட்டபொல பாடசாலையில் கட்டுமானப் பணிகள்

இலங்கை இராணுவத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்பத் திறனை பயன்படுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளை எந்த நேரத்திலும் நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் உள்ளது என்பதற்கு சான்றாக இன்று (ஜூன் 16) காலை 12 வது இலங்கை பொறியியல் படையணி, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல இலுக்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் மாணவர்களுக்கு தேவையான இரண்டு மாடிக் கட்டிடத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான திரு சாகல ரத்நாயக்க அவர்களுடன் இலங்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் - (1981 குழு) திரு அமண்த வீரசிங்க மற்றும் இலுக்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் ஏஜிஎன்சி லக்மால், ஆகியோர் கலந்து கொண்டதுடன், சுப வேளையில் மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், கட்டிடம் நிர்மாணிப்பதற்கான அடிக்கலை நாட்டி வைத்தனர்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (1981 குழு) திரு அமண்த வீரசிங்க அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம், பிரதேசத்தில் மிகவும் பிரபலமான கனிஷ்ட பாடசாலைகளில் ஒன்றாக விளங்கும் பாடசாலையின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, உத்தேச இரண்டு மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அனுசரணை வழங்க முன்வந்தனர்.

இலுக்பிட்டிய கனிஷ்ட வித்தியாலய அதிபர் திரு. ஏஜிஎன்சி லக்மால் அவர்களினால், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைவாக, பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார அவர்கள், தனது 12 வது பொறியியல் சேவைப் படையணி படையினருடன் இணைந்து அப்பகுதியில் உள்ள மாணவர் சமூகத்தின் பெரும் நன்மைக்காக இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யூ ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எச்டிஎம்சி பீஎஸ்சி, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சி, மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் டிசிஏ விக்கிரமசிங்க யூஎஸ்பீ யூஎஸ்எ சிஜிஎஸ்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைத்து சிறப்பு அழைப்பாளர்களும் பாடசாலையின் பிரதான மண்டபத்திற்குச் சென்று, அதே பாடசாலையில் கல்வி கற்கும் 192 மாணவர்களுக்கு கல்விக்கான புலமைப்பரிசில் மற்றும் அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களையும் விநியோகித்தனர். கொழும்பு றோயல் கல்லூரியின் அனுசரணையாளரான திரு பிரசாத் லொகுபாலசூரிய அவர்கள் அந்தப் பாடசாலை உபகரணங்களின் தொகுதிகளை வழங்கியிருந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க அவர்களினால் மாணவர்களுக்கு ஆற்றிய உரையின் போது வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு முகங்கொடுத்து 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை வெற்றிகொள்வதற்கான ஆய்வுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அன்றைய நிகழ்வுகளின் முடிவில் அதிபர் நன்றியுரை ஆற்றியதுடன், பாடசாலையின் இந்த தேவை தொடர்பில் மிகவும் அக்கறையுடன் செயற்பட்ட அனுசரணையாளர்களையும் இராணுவத்தினரையும் பாராட்டினார்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் 613 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், படையினர் அன்றைய நிகழச்சிக்கு உதவினர்.