Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2023 23:49:35 Hours

211 வது காலாட் பிரிகேட்டினரால் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி

211 வது காலாட் பிரகேட்டின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு வர்த்தகர் ஒருவரின் அனுசரணையால், மதவச்சி கூங்கொல்லாவ ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் அதன் அருகிலுள்ள பொதுமக்களின் நலனுக்காக சுமார் 2,000,000/= ரூபா பெறுமதியான புதிய நிலையம் திங்கட்கிழமை (12) படையினரால் நிறுவப்பட்டது.

211 வது காலாட் பிரகேட்டின் தளபதி பிரிகேடியர் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வர்த்தகர் இதற்கான அனுசரணையை வழங்கினார். குடிநீர் இல்லாமையினால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் இந்த நிறுவல் மூலம், தாதுக்கள் மற்றும் அமிலத்தன்மை கொண்ட தண்ணீரை உட்கொண்டு சிறுநீரக நோயினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அதில் மீள்வதற்கான நீண்டகால தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

211 வது காலாட் பிரிகேட் தளபதியின் கோரிக்கையை கருத்திற் கொண்டு, கொழும்பில் வசிக்கும் பிரபல வர்த்தகர்களான திரு.சமன் குணதிலக்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களினால் இந்த செயற்திட்டத்திற்கான அனுசரணை வழங்கப்பட்டது.

நீர் சுத்திகரிப்பு அலகு திறப்பு நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றதுடன், 211 வது காலாட் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் ஏஎம்சீபீ விஜயரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

மதவச்சி பிரதேச செயலாளர் திருமதி எம்சி மாளவியாராச்சி, திரு.சமன் குணதிலக்க மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், 211 வது காலாட் பிரிகேட் மற்றும் 2 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் சிப்பாய்கள் என பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.