Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th March 2023 21:39:38 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு நிர்வாக பரிசோதனையை நடத்தும் நோக்குடன் விஜயம் செய்தார்.

சிரேஷ்ட அதிகாரியை படையினர் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கியதனை தொடர்ந்து மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். தொடர்ந்து அந் நாளின் நினைவாக வளாகத்தில் தளபதியினால் மரக்கன்று ஒன்றும் நாட்டப்பட்டது.

அதன்பிறகு இராணுவ பதவி நிலை பிரதானியின் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக மாநாட்டு மண்டபத்தில் நிர்வாக ஆய்வின் முறையான நிர்வாக நடவடிக்கைகளைத் ஆரம்பமாகியதுடன் இது வழக்கமான நிர்வாக ஆய்வு சுற்றுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர் படைப்பிரிவுகள் மற்றும் பிரிகேட் தொடர்பான செயல்பாட்டு அம்சங்களைக் கேட்டறிந்ததுடன் அவர்கள் இராணுவத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுகிறார்களா அல்லது அந்தந்த அமைப்புகளில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தேவைப்படுகிறதா என்பதைக் கண்டறிய விரும்பினார்.

வெவ்வேறு பணிப்பாகங்கள் மற்றும் கிளைகளின் அந்தந்த பணிப்பாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் தங்கள் அவதானிப்புகளை சமர்ப்பித்து அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பது தொடர்பான நடைமுறைகளை முன்வைத்தனர்.

இவ் விஜயத்தின் முடிவில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி இராணுவ பதவி நிலை பிரதானிக்கு பாராட்டுச் சின்னமாக ஒரு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன் மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக் குறிப்பையும் இராணுவ பதவி நிலை பிரதானி குறிப்பிட்டார்.

இந்த நிர்வாக ஆய்வுக் கலந்துரையாடலில் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.