Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st May 2023 09:24:20 Hours

‘எல்ரீரீஈ பயங்கரவாதத்தை ஒழித்ததன் மூலம் அனைவரும் சமாதானமாக வாழ ஒன்றிணைந்தோம்’ – இராணுவத் தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், தேசிய போர் வீரர்களின் தின செய்தியில் அனைத்துப் போர்வீரர்களுக்கும் அதியுயர் அஞ்சலி செலுத்தும் வகையில், விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்து, அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகுத்ததன் மூலம் தேசத்தை ஒருங்கிணைத்த அனைத்து போர் வீரர்களு்கும் அதி உயர் அஞ்சலி.

இதோ அவரது செய்தி பின்வருமாறு:

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்த எல்ரீரீஈ பயங்கரவாதம் 2009 மே 18ஆம் திகதி ஒழிக்கப்பட்டு பதினான்கு வருடங்கள் நிறைவடைந்துள்ளன, என இராணுவத் தளபதி என்ற வகையில் பெருமையுடனும், கண்ணியத்துடனும் தெரிவிக்கின்றேன் என இச் செய்தி இன்னல்களை ஏற்படுத்திய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தியதை நினைவு கூறும் 'வெற்றி தின' செய்தியில் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்த கால பயங்கரவாதத்தின் போது மக்கள் விவரிக்க முடியாத சிரமங்களையும், துன்பங்களையும், அனுபவித்தனர். இப் போரின் தாக்கம் அனைத்து பகுதிகளையும் பாதித்திருந்தது. தொடர்ந்து அரசாங்கம் யுத்த நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுக்களை ஏற்பாடு செய்து பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்த போதிலும், அம் முயற்சிகள் நிறைவேறவில்லை, பின்னர் நாட்டின் ஆயுதப்படைகளால் பயங்கரவாதிகளிடம் இருந்து தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2006 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி மாவில் ஆறு கால்வாய் திடீரென மூடப்பட்ட பின்னர் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அவர்களின் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதுடன் பெரும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். அதற்கமைய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கிழக்கு மனிதாபிமான நடவடிக்கையைத் தொடங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை இந்த சிரமத்திலிருந்து விடுவிக்க படையினர் நிர்பந்திக்கப்பட்டனர்.

அடுத்த இலக்காக வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் வன்னிப் பிரதேசம் பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. இதன்போது, இலங்கை இராணுவம் 2009 மே 18 ம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நாட்டை மீட்டெடுத்தது. அத்துடன் முக்கிய நோக்கம் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக மனிதக் கேடயமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் பணயக் கைதிகளை மீட்பதாகும், இறுதியாக இலங்கை இராணுவம் அந்த அப்பாவி பொதுமக்களை மீட்டு நாட்டின் வரலாற்றை பதித்து முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்தது.

முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் தேசபக்தி படைத்த சிரேஷ்ட, கனிஷ்ட தளபதிகளின் கூட்டு முயற்சியால் வெற்றி அடைய வழிகாட்டிய தேசியத் தலைவர்கள், அடர்ந்த காடுகள், போர்க்களத்தில் பல இன்னல்களுக்குள் போரிட்ட துணிச்சலான வீரர்கள், போற்றுதலுடனும் நினைவுகூரப்படுகின்றனர். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக இராணுவப் போர்வீரர்களால் பெருமளவில் பங்களிக்கப்பட்ட உன்னத அர்ப்பணிப்பை அனைத்து இலங்கையர்களும் ஆழமான மரியாதையுடன் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்த வரலாற்று நாளில், மே 2009 க்கு முந்தைய காலத்தில் உயிர்நீத்த போர்வீரர்கள், காயமடைந்த போர்வீரர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு பலியாகிய அனைவரையும் தங்கள் மதிப்புமிக்க இளமையையும் வாழ்க்கையையும் தியாகம் செய்தும், மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

எல்லா நேரங்களிலும் நாட்டின் மற்றும் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதில் இலங்கை இராணுவம் முன்னணி வகிக்கிறது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அனர்த்த நிவாரணம் மற்றும் கொவிட்-19 நோய் பரவல் கட்டுப்பாடு ஆகியவற்றின் போது, பல்வேறு திறன்களை கொண்ட இராணுவம், தங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல், உங்களை மீட்க உதவிக்கு வந்தது.

நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், நாட்டின் பொது நலனுக்கும் இராணுவம் தயக்கமின்றி பங்காற்றியுள்ளது என்பது ரகசியமல்ல. மிகவும் கடினமான காலங்களில் நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கும் நோக்கில் பொறுமையும், ஒழுக்கமும் கொண்ட இராணுவ வீரர்களாக உங்களைக் கட்டுப்படுத்தியமையை புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மற்றும் குடிமக்களின் உடைமைகளையும் உயிர்களையும் பாதுகாத்து நாம் அனைவரும் நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதே நாட்டின் பாதுகாப்புப் படையினர் என்ற வகையில் எங்களின் முதன்மைப் பொறுப்பு என்பதையும் நான் வலியுறுத்துகிறேன்.

சிவில் ஊழியர்கள் உட்பட "தேசத்தின் பாதுகாவலர்கள்" என்று உயர்வாக மதிக்கப்படும் அனைத்து பணிபுரியும் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலனுக்காக மேலும் பல நலத்திட்டங்கள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு இணங்க இராணுவத்தின் அமைப்பு, செயல்பாட்டு வரிசைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டுக் கருத்தை சீரமைக்கவும் மறுகட்டமைக்கவும் பூர்வாங்க ஏற்பாடுகளைத் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள முன்வந்த இராணுவத்தின் ஒழுக்கமான போர்வீரர்களாகிய நீங்கள், பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் எமது தாய் நாட்டிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு, உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தேசியப் பொறுப்புக்களை தொடர்ந்தும் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, எங்கள் தாய்நாட்டின் இந்த சவாலான கால கட்டத்தில் ஆயுதப்படைகளின் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்ற வலிமை, தைரியம் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்குகிறேன், மேலும் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும், உயிர்கள், பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கவும் உதவுங்கள்.

கடவுள் ஆசிர்வதிக்கட்டும்! "