Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 21:44:07 Hours

இராணுவ தளபதியால் ருவன்வெலி மஹா சேயவில் காணிக்கை

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் சனிக்கிழமை (மே 20) காலை 'சந்த ஹிரு சேய' வளாகத்தில் சமய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு முன்னர் 'ருவன்வெலி மகா சேய' விஹாரையின் விகாராதிபதி வண. ஈத்தல வெட்னுவெவ ஞானதிலக தேரரை சந்தித்தார்.

இராணுவத் தளபதி 'கிலான் பாச' காணிக்கையை செலுத்தி புனித ருவன்வெளி மகா சேயவை வழிபட்ட சில நிமிடங்களின் பின்னர், தனது மனைவியுடன் 'அடமஸ்தானாதிபதி' வண. பல்லேகம ஹேமரத்ன தேரரினால், 'ஈவிஸ்' குழுமத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அனுராதபுரத்தைச் சேர்ந்த 750 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தார்.

இத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அனுராதபுரத்தில் உள்ள அடமஸ்தானங்களின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் 'பிரிகார மற்றும் தானங்களை வழங்கனர். இராணுவத் தளபதி, திருமதி ஜானகி லியனகே ஆகியோருக்கு பிக்குகலால் விசேட நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் மாண்புமிகு ஹோ தி தான் ட்ரூக், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, வடமத்திய முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க யூஎஸ்பீ ஏடிஓ, 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஏடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, ஈவிஸ் குழுமத்தின் தலைவர் திரு சஞ்சீவ விக்ரமநாயக்க மற்றும் பிரதேசத்தின் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வைக் கண்டுகளித்தனர்.