Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2023 21:59:58 Hours

நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள, நைஜீரியா இராணுவ பிரதிநிதிகள் இராணுவ தலைமையகத்திற்கு வருகை

நைஜீரியா இராணுவத்தின் இராணுவ அதிகாரிகளின் தூதுக்குழுவினர் இலங்கைக்கான ஐந்து நாள் சுற்றுப்பயணத்தில் புதன்கிழமை (7) இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

நைஜீரியா இராணுவ பயிற்சி மற்றும் கோட்பாட்டு கட்டளையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சோ ஒலபன்ஜி அவர்களின் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவினர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தினர். தூதுக்குழுவுடனான சந்திப்பின் போது, இராணுவத் தளபதி இரு நாடுகளிலும் சாத்தியமான பயிற்சி தொகுதிகள் மற்றும் களப் பயிற்சிகளை நடத்துவது தொடர்பான விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

நட்புரீதியான கலந்துரையாடலின் முடிவில், அவர்களின் வருகையைப் பாராட்டிய இராணுவத் தளபதி அவர்களுக்கு நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பின் அடையாளமாக நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரும் தளபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டனர்.

8 பேர் கொண்ட இக் குழுவினரை இராணுவ தலைமையக பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தலைமையக கட்டிடத்தின் நுழைவாயிலில் வரவேற்றார்.

அதன் பின்னர், பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவம் தொடர்பான விரிவான விளக்கமொன்றையும் தற்போதைய பயிற்சி தொகுதிகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் சிறப்பாக விளக்கமளித்தார்.

அடுத்து, தூதுக்குழுவினர் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்திற்கு அழைக்கப்பட்டனர், அங்கு ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜிடபிள்யூஏ செனவிரத்ன யூஎஸ்பீ பீஎஸ்சீ, மற்றும் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் டிஎல்யூ த தாப்ரேவ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகம் தொடர்பாக தூதுக்குழுவிற்கு விளக்கினார்.

இராணுவத் தலைமையகத்திற்கு அவர்களின் வருகையின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் அனைவரும் புறப்படுவதற்கு முன் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர்.