Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2023 11:56:16 Hours

75வது தேசிய சுதந்திர தினம் ஆடம்பரம் மற்றும் கண்ணியத்துடன் கொண்டாடப்பட்டது

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ பிரதமர் மற்றும் சர்வமத தலைவர்கள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள், பாதுகாப்பு, அரச மற்றும் சிவில் முக்கியஸ்தர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இன்று (பெப்ரவரி 4) காலை காலி முகத்திடலில் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வின் போது தாய் நாட்டிற்கு மரியாதை செலுத்தினர். செழிப்பு, சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான இலங்கையின் தேடலில் முன்னோக்கிச் செல்வதற்கான அனைத்து இலங்கையர்களின் உறுதியான அர்ப்பணிப்பு மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தப்பட்டது.

சனிக்கிழமை காலை நேர்த்தியான மற்றும் எளிமையான காட்சியானது, கௌரவ பிரதமர் அவர்கள் அங்கு சென்றடைந்த சில நொடிகளுக்குப் பின்னர், அன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தை அடையாளம் காட்டும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி வருகை தந்தார்.

சபாநாயகர், பிரதம நீதியரசர், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர், மேல் மாகாண ஆளுநர், மேல் மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி , இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இராஜதந்திரிகள் மற்றும் பல புகழ்பெற்ற அழைப்பாளர்கள் காலை 7.45 மணியளவில் உரிய இடத்திற்கு வந்திருந்தனர்.

இந்த ஆண்டு நினைவுக் கொண்டாட்டம் நாட்டின் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரு முக்கிய அடையாளமாக உள்ளதுடன், இது பொருளாதார நெறுக்கடிகள் மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு மத்தியில் தேசத்தின் முன்னோக்கிய பயணத்திற்கு முன்வைக்கப்பட்ட சவால்கள் ,பன்முக உலகளாவிய கட்டுப்பாடுகள். மற்றும் பின்னடைவுகளை பொருட்படுத்தாமல், எளிமை, சுருக்கம் மற்றும் வண்ணமயமான கண்ணியத்தின் அனைத்து அடையாளங்களையும் கொண்டிருந்தது.

வருகை தந்த அதிமேதகு ஜனாதிபதியவர்களை, பிரதமர், பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அவர்களாலும், இராணுவ பொலிஸ் மற்றும் பொலிஸாருடன் கூடிய வண்ணமயமான அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை தளபதி, விமானப்படைத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் இணைந்து அன்றைய பிரதம அதிதியான அதிமேதகு ஜனாதிபதியை பிரதான கொடிக்கம்பத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், 'மகுல் பேர' (மங்கள வாத்தியம்) முழங்களுடன் தேசியக் கொடியை ஏற்றி வைக்கப்பட்டது. மாகாணத்தில் உள்ள பாடசாலை மாண, மாணவிகள் தேசிய கீதத்தைப் இசைத்தனர்.

அதன் பின்னர், விசேட மேடையில் இருந்து ஜனாதிபதி அவர்களுக்கு, மாணவியர் குழுவினால் வழங்கப்பட்ட ‘ஜெயமங்கள காத்தா’ மற்றும் ‘தேவோ வஸ்ஸது கலேன’ பாராயணம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னத நோக்கத்திற்காக உயிர்நீத்த அனைத்து தேசபக்தர்கள் மற்றும் போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அன்றைய நிகழ்ச்சி நிரலின் அடுத்த கட்டமாக வர்ணமயமான முப்படைகளின் பாதுகாப்பு அணிவகுப்பு முப்படைகளின் சேனாதிபதியான கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இலங்கை பீரங்கி படையணியினால் மரியாதை செலுத்தும் வகையில் வழமையான 21 பீரங்கி குண்டுகளால் மரியாதை வழங்கப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, முப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், பொலிஸ், பொலிஸ் விஷேட படையணி, சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள், தேசிய மாணவ சிப்பாய் படையணி உறுப்பினர்கள், அங்கவீனமுற்ற போர்வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு மரியாதை இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் தலைமையில் இராணுவ மரபுகளுக்கு அமைய வழங்கப்பட்டது.

அன்றைய அணிவகுப்பில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வாகனங்களின் அணிவகுப்பும் இடம் பெற்றது.

மகத்தான மற்றும் தனித்துவமான பங்களிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ள இலங்கை இராணுவம், தேசத்திற்கும் அதன் முன்னேற்றத்திற்கும் மிகவும் விரும்பப்படும் சேவை வழங்குனராகத் தொடர்ந்தும் இருந்துவருகிறது என்பதை அன்றைய நிகழ்வில் எடுத்துக்காட்டியுள்ளது.

அடுத்ததாக, விமானப்படை மற்றும் இலகுரக விமானங்களின் கண'காட்சி கமாண்டோ படையினர்,விஷேட படையினர் உட்பட முப்படை வீரர்களின் பரசூட் காட்சிகள் அன்றைய நிகழ்ச்சிக்கு மேலும் அழகு சேர்த்தனர்.

பொலிஸ், விஷேட பொலிஸ் படையணி மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட மொத்தம் 6877 பேர் அணிவகுப்ப மரியாதையில் பங்கு பற்றினர்.

மேலும், தேசிய மாணவ சிப்பாய் படையணியின் உறுப்பினர்களும் அணிவகுப்பின் முக்கிய பகுதியை வண்ணமயமாக்கினர்.

அனைத்து இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் தமிழில் தேசிய கீதத்தை பாடியதுடன் அன்றைய தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

நண்பகல் 12.00 மணியளவில் இலங்கை கடற்படையினர் சைத்ய வீதியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு அருகில் 25 துப்பாக்கி வேட்டுகளுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தினர்.

சுதந்திர தினத்தன்று (4) பௌத்த மத அனுஷ்டானங்கள், இந்து சமய சடங்குகள், இஸ்லாமிய பிரார்த்தனைகள், கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகள் கொழும்பில் பல புனித இடங்களில் இடம்பெற்றன.

சுதந்திர சதுக்க மண்டபத்தில், வெள்ளிக்கிழமை (3) மாலை இடம்பெற்ற கலாசாரக் காட்சியானது, வண்ணங்களையும் பன்முகத்தன்மையையும் சேர்த்தது. அதிமேதகு ஜனாதிபதி இன்று பிற்பகல் 6.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.