Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th February 2023 14:03:40 Hours

நூற்றுக்கணக்கான முப்படை அதிகாரிகளுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் ஓட்டபோட்டி ஆரம்பம்

சர்வதேச இராணுவ தினத்தினை முன்னிட்டு சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓட்டப்போட்டி சனிக்கிழமை (18) கொழும்பு விமானப்படை மைதானத்தில் ஆரம்பமானது. இப் போட்டியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வு) தலைமையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, இராணு,கடற்படை,விமானப்படை தளபதிகள் மற்றும் முப்படை சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட 300 க்கும் மேற்பட்ட முப்படைஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டுக்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் ஓட்டபோட்டி விமானப்படை மைதானத்தில் தொடங்கி சுமார் 4 கி.மீ தூரத்தை கடந்து அதே இடத்தில் நிறைவடைந்தது. இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிலிருந்து தலா நூறு படையினர் முப்படைத் தளபதிகளின் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முக்கியத்துவத்தைச் சேர்ப்பதுடன் இலங்கையில் உள்ள ஆயுதப் படைகளின் விளையாட்டுத் திறன்களுக்கான சர்வதேச அங்கீகாரத்தை இது அடையாளப்படுத்துகிறது.

இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ் வழங்கல் நிகழ்வுடன் இராணுவத் தளபதியும் இணைந்திருந்தார்.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 18 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இது உலகின் மிகப்பெரிய பல்துறை அமைப்புகளில் ஒன்றாகும். சர்வதேச இராணுவ விளையாட்டு கழகம் அதன் 140 உறுப்பு நாடுகளின் ஆயுதப் படைகளுக்காக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்ற உலகளாவிய விளையாட்டு அமைப்புகளில் ஒன்றாவதுடன் இதில் அதிக எண்ணிக்கையிலான துறைகள் காணப்படுகின்றன. முன்பு போர்க்களத்தில் சந்தித்திருக்கக்கூடிய வீரர்கள் இப்போது விளையாட்டு மைதானத்தில் நட்புடன் சந்திக்கிறார்கள். இது 1998 இல் அனைத்து உறுப்பு நாடுகளாலும் கையொப்பமிடப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் பணி அறிக்கையில் அமைக்கப்பட்ட தத்துவம் மற்றும் இலட்சியங்களுக்கு இணங்க இயங்குகின்றது.

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் தொலைநோக்கு வீரர்கள் இடையே நட்பை அங்கீகரிக்கிறதுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆயுதப்படை வீரர்களை விளையாட்டு நடவடிக்கைகள் மூலம் ஒன்றிணைக்க அர்ப்பணித்த உலகளாவிய சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பாக காணப்படுவதுடன் படையினருக்கு உடல் பயிற்சி, இராணுவ தயார்நிலை மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்கின்றது. சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் தலைமைச் செயலகம் புருஸெல்ஸில் அமைந்துள்ளது.