Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st February 2023 14:28:01 Hours

இலங்கை கவச வாகன படையணியின் ‘வர்ண இரவு’

இராணுவத்தின் குதிரைப்படை வீரர்களின் தனித்துவமான விளையாட்டுத் திறமைகளை அங்கீகரித்து பாராட்டும் வகையில் இலங்கை கவச வாகன படையணி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘வர்ண இரவு’ திங்கட்கிழமை (20) மாலை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கலந்து கொண்டார்.

மங்கள விளக்கேற்றல், உயிரிழந்த இலங்கை கவச வாகன படையணி போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துதல் என்பன இடம் பெற்றதுடன், அன்றைய பிரதம அதிதியை வரவேற்றதன் பின், கவச வாகன படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.பி.எஸ்.என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.

சர்வதேச, தேசிய மற்றும் இராணுவ மட்ட விளையாட்டு நிகழ்வுகளில் சிறப்பாகச் செயற்பட்ட 75 இலங்கை கவச வாகன படையணி விளையாட்டு சாதனையாளர்களுக்கு உரத்த கரவொலிக்கு மத்தியில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, முன்னாள் இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் ஜகத் ஜெயசூரிய (ஓய்வு) ஆர்டப்ளியூபீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி இலங்கை கவச வாகன படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.பி.எஸ்.என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ மற்றும் இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ ஏ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியூ ஆகியோருடன் இணைந்து வண்ணங்கள் வழங்கி கௌரவித்தார்.

அதனை தொடர்ந்து அன்றைய இரவின் முக்கிய நிகழ்வாக இராணுவ கவச வாகன படையணியில் முக்கிய பங்காற்றி செயற்பட்டோருக்கு "ஆர்மர் லெஜெண்ட்ஸ்" - வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்க இராணுவ கவச வாகன படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ தளபதி சிறப்பு மேடைக்கு சென்றனர்.

இராணுவ கவச வாகன படையணியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் குறிப்பிடத்தக்க பிரசன்னத்தைச் சேர்த்தது. முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ வீஎஸ்வீ யூஎஸ்பீ எல்ஓஎம் என்டியூ பீஎஸ்சி , லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் மணைவி திருமதி லல்லி கொப்பேகடுவ, திருமதி ஜெயந்தி தலுவத்த ஆகியோரது கணவர்கள் இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் முறையே கூடைப்பந்தாட்டத்திலும் ரக்பியிலும் சிறந்து விளங்கியமைக்காக 'ஆர்மர் லெஜெண்ட்ஸ் - லைஃப் டைம் அசீவர்ஸ் விருதுகளை' பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தளபதியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இராணுவ கவச வாகன படையணி படைத்தளபதி அவர்களினால் தளபதிக்கு போர்த் தாங்கியின் பிரதி ஒன்றை வழங்கினார். அதனை அடுத்து தளபதி அவர்களினால் இராணுவ கவச வாகன படையணியின் எதிர்கால விளையாட்டு திறன் விருத்திக்காக ரூ.1 மில்லியன் பணப்பரிசு வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதியின் ஒரு சுருக்கமான உற்சாகமூட்டும் உரையின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு அரங்கில் இராணுவம் மற்றும் இராணுவ கவச வாகன படையணி கொடிகளை உயரத்தில் பறக்கவிட்ட இராணுவ கவச வாகன படையணியின் அனைத்து விளையாட்டு வீரர்களும் தமது ஒத்துழைப்பினை வழங்கினர். ஒரு குழு படத்துடன் அன்றைய நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தன.

இவ் வண்ணமயமான நிகழ்வு இராணுவ கவச வாகன படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டி.பி.எஸ்.என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இராணுவ கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் டப்ளியூ.பீ காரியவசம், இராணுவ கவச வாகன படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பி.என் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ ,யுஎஸ்பீ, ஆகியோரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான அதிதிகள் ‘வர்ண இரவு’ நிகழ்வைக் கண்டுகளித்தனர்.