Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd February 2023 12:19:17 Hours

இராணுவ தலைமையகத்தில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் தொழில்நுட்ப கருத்தரங்கு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் தலைமையில் இலங்கை சமிக்ஞைப் படையணியினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிடப்பட்ட 'தொழில்நுட்பக் கருத்தரங்குகள்' தொடரின் முதலாவது கருத்தரங்கு இன்று (பெப்ரவரி 22) காலை இராணுவத் தலைமையகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

இந்தக் கருத்தரங்குத் தொடர் இராணுவத் தளபதியின் கருத்தியல் அடிப்படையில் இராணுவ பிரதம சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.எம்.எல்.டி ஹேரத் ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பிரதம சமிக்ஞை அதிகாரி ஆகியோர் இணைந்து இராணுவத் தளபதியை நுழைவாயிலில் மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர், கூட்டத்தின் முன்னிலையில் இராணுவத் தளபதி சில ஆரம்ப அவதானிப்புகளை செய்வதற்கு முன்னர் இராணுவ பிரதம சமிக்ஞை அதிகாரி வரவேற்பு உரை நிகழ்த்தினார். 12 வது இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி கேணல் கே.வீ.பீ தம்மிக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ, அவர்கள் முதல் இரண்டு பேச்சாளர்களை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் (கலாநிதி) சுதத் ஆர்.முனசிங்க, ‘தேசிய சைபர் செயற்பாடுகளைத் தொடங்குவதற்கு சைபர் டொமைனில் முக்கியமான இராணுவ உட்கட்டமைப்பின் கட்டாய பாதுகாப்பு’ என்ற தலைப்பின் கீழ் முதல் அமர்வின் முதல் விரிவுரையை நடாத்தினார்.

அமர்வின் அடுத்த பங்களிப்பை, 'மேம்பட்ட தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை கையகப்படுத்துதல் மற்றும் ஏற்றுக்கொள்வது நிறுவன செயல்திறனை மேம்படுத்துகிறது' என்ற கருப்பொருளில் பேராசிரியர் பெரக்கும் பத்திரன விரிவுரை வழங்கினார்.

மூன்றாவது பேச்சாளராக 12 வது இராணுவ சமிக்ஞை படையணியின் கட்டளை அதிகாரி ‘இராணுவ-தொழில்நுட்ப நிலை: நாம் எங்கே இருக்கிறோம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர், மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ்.ரத்நாயக்க அவர்கள் முன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் சாரம்சம் மற்றும் எதிர்காலத்திற்கான இணைப்பு சீர்திருத்தத்திற்கான முறைமைகள் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு மறுவரையரை செய்தல் என்ற தலைப்பில் இறுதி விரிவுரையை நடாத்தினார். அமர்வுகளின் முடிவில், வருகை விரிவுரையாளர்கள் பிரதம சமிக்ஞை அதிகாரியிடமிருந்து பாராட்டு சின்னங்களைப் பெற்றனர்.

பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்.யூ.எம்.என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.சீ லமாஹேவா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.