Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st March 2023 12:22:00 Hours

ஐ.நா அமைதிகாக்கும் படைக்கான 14 வது இலங்கை குழு லெபனான் செல்ல தயார் நிலையில்

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையின் பணிக்காக இலங்கையின் 14 வது குழு, புறப்படுவதற்கு முன்னர் புதன்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு பனாகொடை இலங்கை பீரங்கி படையணியின் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதையை வழங்கியது.

அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியும், இலங்கை தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கலால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், தளபதிக்கு நுழைவாயில் இலங்கை பீரங்கி படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அன்றைய பிரதம அதிதி அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அணிவகுப்புத் கட்டளையாளர், அணிவகுப்பை மறுபரிசீலனை செய்யுமாறு அன்றைய தளபதியிடம் கோரிக்கை விடுத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, இராணுவத் தளபதி இராணுவ மரபுகளுக்கு இணங்க அணிவகுப்பு மரியாதையை மறுபரிசீலனை செய்தார்.

இலங்கை இராணுவத்தின் ஐ.நா பணிகளுக்கு அடையாள முக்கியத்துவத்தைச் சேர்த்து, அன்றைய பிரதம அதிதி தேசியக் கொடி, ஐக்கிய நாடுகளின் கொடி, இராணுவக் கொடி மற்றும் இலங்கை பீரங்கிக் படையணி கொடி ஆகியவற்றை சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிக்கு செல்லும் இலங்கை குழுவின் கட்டளை அதிகாரியிடம் கையளித்தார்.

ஐ.நா அமைதிகாக்கும் பணியின், 14 வது இலங்கை குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன் கேணல் டிபீஐடி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜி மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.எம்.சிகே வன்னிநாயக்க அவர்களும் செயற்படுவர். இக்குழுவில் 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்களைக் கொண்ட 125 பேர் தயார் நிலையில் உள்ளனர்.

இலங்கை பீரங்கிப் படையணி, இலங்கை பொறியியல் படையணி, இலங்கை சமிக்ஞை படையணி, இயந்திரவியல் காலாட் படையணி, கொமாண்டோ படையணி, விஷேட படையணி, பொறியியல் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி, இலங்கை இராணுவப் பொலிஸ் படையணி, இலங்கை இராணுவ மகளிர் படையணி, இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகிய படையணிகளின் அங்கத்தவர்கள் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை முடிந்தவுடன் இராணுவத் தளபதி, குழுவுடன் உரையாடியதுடன், நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வெளிநாட்டு பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஐக்கிய நாடுகள் சபைக்கு உட்பட்ட தூதுக்குழுவிற்கு ஆற்றிய சுருக்கமான உரையில், இராணுவத் தளபதி அதன் முக்கியத்துவத்தையும், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள இலங்கைக் குழு எவ்வாறு ஒரு முக்கிய சக்தியாக மாறியுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினார்.

"நாங்கள் 2010 இல் லெபனான் பணியைத் தொடங்கினோம், இது எங்கள் பயிற்சி மற்றும் அனுபவமே எங்களை ஒரு சிறந்த நிலையில் வைத்துள்ளது, இதன் மூலம் இந்த பணியை திறம்பட முழுவதுமாகத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது."

"ஐ.நா. அமைதிகாக்கும் படையினருக்கும் லெபனானில் உள்ள பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக நல்ல உறவுகளைப் பேணுவது எங்கள் பணிக்கு மிகவும் பொருத்தமானது மற்றும் முக்கியமானது. எல்லா நேரங்களிலும் ஐ.நா மக்களின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும் அனைவரும் நாட்டிற்கான "தூதர்கள்" என்பதாலும், அது இலங்கைக் கொடியை உயர்வாகப் பறக்க வைக்கும் என்பதாலும், மிக உயர்ந்த ஒழுக்கத்தை பேணுமாறும் அர்ப்பணிப்புடனும் கடமைகளை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் உள்ள 13வது குழுவானது, அவர்களின் சேவைக்காலம் நிறைவடைந்துள்ளதுடன், 14 வது குழு அங்கு கடமைகளை பொறுப்பேற்றவுடன் விரைவில் நாடு திரும்புவர்.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத்யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்குபற்றினர்.