Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2023 14:00:01 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமைகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினருக்கு புதிய வசதி கட்டிடம் திறந்து வைப்பு

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தின் இரண்டு புதிய தங்குமிட வசதி கட்டிடங்களை திறந்து வைப்பதற்காக இராணுவ தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத்தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று காலை (6 ஏப்ரல் 2023) குருநாகல் ஹெரலியவலவில் படையணி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார்.

இராணுவ சம்பிரதாயங்களின்படி நுழைவாயிலில் சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையக நிலைய தளபதி பிரிகேடியர் எச்.ஏ கீர்த்திநாத ஆர்எஸ்பீ கேஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இராணுவத் தளபதியை முகாம் வளாகத்திற்கு அன்புடன் வரவேற்றார். முதலில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சிறப்பு பதாதையினை திரைநீக்கம் செய்து நாடா வெட்டி அதிகாரிகள் தங்கும் கட்டிடத்திற்குள் நுழைந்து புதிய வசதி கட்டிடத்தினை திறந்து வைத்து அதனை பார்வையிட்டதுடன் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையக சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினரின் முயற்சியுடன் குறைந்த செலவில் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியதனை தளபதி பராட்டினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அன்றைய பிரதம விருந்தினர் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் தங்குமிட வசதி கட்டிடத்தினை மேற்பார்வையிட்டதுடன் நவீன வசதியை அமைக்க உழைத்த இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தொழில்நுட்ப மற்றும் பொறியியல் படையினருடன் சில எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து இராணுவ தளபதியும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படைத்தளபதி தலைமையகத்தில் தற்போதுள்ள கட்டிடங்களை புணரமைப்பு செய்ய முடியாது என்பதால் சிப்பாய்களின் தங்குமிட வசதிகளுக்காக புதிய முன்று மாடிகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட அழைக்கப்பட்டார். பின்னர், இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து படையணி தலைமையக வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏனைய அனைத்து நிர்மாணப் பணிகளின் முன்னேற்றங்களையும் பார்வையிட்டதுடன், அதற்கேற்றவாறு படையினருக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையக நிகழ்வின் பின்னர் குருநாகல் வெஹேராவில் உள்ள இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி பேரவை உறுப்பினர் கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களுடன் தளபதி கலந்துரையாடினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விழாவில் கலந்து கொண்டனர்.