Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th April 2023 10:51:45 Hours

தளபதியுடன் இராணுவ முஸ்லிம் உறுப்பினர்கள் லயா பீச் ஹோட்டலில் ‘இப்தார்’ நிகழ்வு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடன் இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்குபற்றலில் இஸ்லாமிய 'இப்தார்' நிகழ்வு சூரிய அஸ்தமன முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் நேரத்தில் புதன்கிழமை (19) வாத்துவ லயா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது.

இராணுவ இஸ்லாமிய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு உலக அளவில் முஸ்லிம்களால் கடைப்பிடிக்கப்படும் ஒற்றுமையின் அளவு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக காணப்படுகின்றது. அதற்கமைய இஸ்லாமிய சம்பிரதாய முறைகளுக்கமைய நாட்டின் செழிப்புக்கு ஆசீர்வாதங்களை வழங்குவதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

இந்நிகழ்வில் வரவேற்பு உரையை இராணுவ இஸ்லாமிய சம்மேளனத்தின் தலைவர் பிரிகேடியர் ஏஎம் முத்தலிப் அவர்கள் ஆற்றியதோடு, மௌலவி, மதிப்புக்குறிய அப்துல்லா மொஹிதீன் அவர்களால் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சொற்பொழிவு ஆற்றப்பட்டதுடன் இப்தார் என்றால் என்ன என்பதை அவர் தெளிவாக விளக்கினார். இது வாழ்க்கையின் நடத்தையுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைப் பற்றியும் அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

நோன்பு திறப்பு தொழுகைக்குப் பின்னர், பிரதம அதிதியான, இராணுவத் தளபதி அவர்களுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஎஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

அதே வேளையில், இந்த நிகழ்வில் ‘இப்தார்’ சொற்பொழிவினை நடாத்திய இரு மௌலவிகளுக்கு இராணுவத் தளபதி பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் இராணுவ இஸ்லாமிய சம்மேளனத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் டிஎம்பீ ஜலால் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

பாதுகாப்புச் சேவைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜிஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜி, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி, ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசி அட் செய்சா, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.