Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd March 2023 21:17:07 Hours

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரிக்கு தளபதி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதியின் அழைப்பின் பேரில் சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரிக்கு வியாழக்கிழமை (மார்ச் 23) அதன் செயல்பாட்டு அம்சங்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக விஜயம் செய்தார்.

அன்றைய பிரதம விருந்தினரை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜி அவர்கள் நுழைவாயில் வழங்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்புடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து அந்நாளின் நினைவாக இராணுவ தளபதி இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜீஎஸ் செனரத் யாப்பா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்களுடன் இணைந்து குழுப்படம் எடுத்துக்கொண்டார்.

அடுத்து, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி வளாகத்திற்கு அலங்காரமான மற்றும் மறக்கமுடியாத மதிப்புள்ள சேவை செய்த டி-55 பிரதான போர் யுத்த தாங்கி மற்றும் 130 மிமீ பீரங்கி தூப்பாக்கியினை திறைநீக்கம் செய்ய இராணுவ தளபதி அழைக்கப்பட்டார். அன்றைய பிரதம விருந்தினர் தனித்தனியாக அந்த நினைவுச்சின்னங்களை திறந்து வைத்தார்.

1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் ‘சத்ஜய’ மற்றும் ‘ஜயசிகுரு’ நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட டி-55 எம்பிடி ஆனது புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. 2009 மே க்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது 130 மிமீ பீரங்கி துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதியுடன் இணைந்து மாணவர் அதிகாரிகளின் சிண்டிகேட் அறைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இளங்கலை பட்டதாரிகளின் தங்குமிடங்கள், பரீட்சை மண்டபங்கள், சாப்பாட்டு அறை மற்றும் பிற வசதிகளை பார்வையிட்டார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல் ரோட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஐஜி பின்னர் இராணுவத் தளபதிக்கு விஜயம் செய்ததன் நினைவாக ஒரு சிறப்பு பாராட்டு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இராணுவத் தளபதி வெளியேறுவதற்கு முன், அவர் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் ஒரு பாராட்டுக் குறிப்பை பதிவிட்டார்.

இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு, யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி, தலைமை கள பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்.கே ஜெயவர்த்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜே.ஏ.ஆர்.எஸ்.கே ஜெயசேகர யுஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ கவச வாகன பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ பி காரியவசம், பீரங்கி பீரங்கி பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்.பி மல்வரகே ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஐஜீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி என்பது முப்படைகளின் நடுத்தர தர அதிகாரிகளுக்கான இராணுவக் கல்விக்கான மிக உயர்ந்த இடமாவதுடன் மேலும் இது முப்படையினர் இலங்கை பொலிஸார், நட்பு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அதிகாரிகளின் அரசாங்க நடைமுறைகள் மற்றும் பிற பொதுத் துறைகள் பற்றிய அறிவை வழங்கும் அதே வேளையில் கட்டளை மற்றும் பதவி நிலை அதிகாரிகளை குறித்த நியமனங்களுக்கு தயார்படுத்துவதற்காக மற்றும் பிற பொது நிறுவனங்கள் தொழில்முறை அறிவு மற்றும் புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது.