Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2023 22:18:02 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் போரில் உயிரிழந்த சார்ஜன் குடும்பத்திற்கு புதிய வீடு

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, நாட்டின் ஒற்றையாட்சிக்காக 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் உயிரிழந்த சார்ஜன் டபிள்யூஎம் குமாரதாச அவர்கள் செய்த விலைமதிப்பற்ற சேவைகள் மற்றும் தியாகங்களை நினைவில் கொண்டு, அவரின் மணைவி மற்றும் பிள்ளைகளுக்காக அனுராதபுரம் குடா கலத்தேவவில் சனிக்கிழமை (8) புதிய வீடொன்றை நிர்மாணித்துடன் அவரது நினைவுக்கு மேலும் அங்கீகாரம் வழங்கினர்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்குப் பங்களிப்பு வழங்கிய உயிர் தியாகம் செய்த சார்ஜன் அவர்களின் குடும்பத்திற்கு இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகம் மற்றும் இராணுவத் தளபதியின் நிதியம் இணைந்து வழங்கிய நிதியினால் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர்களால் நிர்மாணிக்கப்பட்ட இப் புதிய வீடு, மூன்று படுக்கை அறைகள் உட்பட அனைத்து சுகாதார வசதிகள், சாப்பாட்டு மற்றும் வரவேற்பரை மற்றும் விசாலமான சமையலறை போன்றவை இராணுவத்தின் 2.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுக்கும், உயிர் நீத்த போர்வீரரின் மணைவி தாம்பூலம் வழங்கி வரவேற்றார். பின்னர் வீட்டின் சாவியை துணைவியார் திருமதி எச்எம்எஸ் குமாரிஹாமி மற்றும் பயனாளிகளுக்கு வழங்குவதற்கு முன்னர், பிரதம அதிதி அவர்கள் பௌத்த செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் பதாதையையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

நாடா வெட்டியதை தொடர்ந்து, சம்பிரதாய மங்கல விளக்கேற்றி பால் பொங்கலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. குடும்ப உறுப்பினர்கள், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் கேஏ கீர்த்தினாத, சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சேவை வனிதையர் பிரிவு பெண்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மேலும் இராணுவத் தளபதி, சேவை வனிதையர் பிரிவின் தலைவி, சேவை வனிதையர் பெண்கள் மற்றும் நலன் விரும்பிகள், விதவை பெண் மற்றும் அவரது பிள்ளைகளுக்கு குளிர்சாதன பெட்டி, ஒரு ரைஸ் குக்கர், சமையலறை உபகரணங்கள், உலர் உணவுகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்கினர்.

இராணுவத் தளபதி விதவை பெண் மற்றும் மறைந்த சார்ஜன் அவர்களின் பிள்ளைகளுடன் உரையாடினார், அவர்களின் நலம் பற்றி விசாரித்தார் மற்றும் மறைந்த சிப்பாயின் நினைவுகளுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் போர்க்களத்தின் நினைவுகளை நினைவு கூர்ந்தார். "உங்கள் அன்புத் தந்தை வீணாக இறக்கவில்லை, 2009 க்கு முன் அவர் நாட்டிற்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார், இப்போது அவரது நினைவின் கண்ணியத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமை" என்று அவர் அவர்களிடம் கூறினார்.

போரில் கடுமையாக 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியில் போரிட்ட சார்ஜன் டபிள்யூ.எம். குமாரதாச அவர்கள் சேவையில் இருந்த போது திடீரென மாரடைப்பு காரணமாக 2002 இல் காலமானார். அனுராதபுரம் குடா கலாத்தேவவில் இடம்பெற்ற வீடு திறப்பு நிகழ்வில் 21 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யுபீஎபீடபிள்யு நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 21 வது காலாட் படைபிரிவின் பொது பணி கேணல் கேஎடிஎன்ஆர் கன்னங்கர ஆர்எஸ்பீ ஐஜி, இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையக பிரதி தளபதி என்எச்ஜேஎம் நவரத்ன, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.