Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th April 2023 19:15:04 Hours

புத்தாண்டில் தேநீர் உபசாரத்துடன் முதல் நாள் வேலை ஆரம்பம்

இராணுவத் தலைமையகத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் பின்னர் தேநீர் உபசாரம் மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு திங்கட்கிழமை (17) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

தளபதி நிகழ்விடத்தை வந்தடைந்தவுடன், இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட இராணுவ பிரதிப் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர்கள் வரவேற்றனர்.

புத்தாண்டு தின அடையாளமாக பல வகையான பாரம்பரிய இனிப்பு பண்டங்கள் மற்றும் பாற்சோறு ஆகியவை காணப்பட்டன. மேலும் அன்றைய பிரதம அதிதி மங்கள விளக்கேற்றியதுடன், இராணுவ பதவி நிலைப் பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் விளக்கேற்றினர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருடனும் கலந்துரையிடியதுடன், அவர்களின் பயிற்சி, நலன் மற்றும் தொழில்சார் நலன்கள் பற்றிய பொதுவான விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தேநீர் மேசைக்கு அழைக்கப்பட்ட சிப்பாய்களுடன் ஒரு மணித்தியாலமாவது செலவழிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரவானையற்ற அதிகாரிகள், அதிகாரவானையற்ற அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் மற்றும் அனைத்து இராணுவ வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.