Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2023 09:30:37 Hours

நைஜீரிய தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் இராணுவத் தளபதியை சந்திப்பு

நைஜீரியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 17 கல்விசார் உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று தனது பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு ஆறு நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். எயார் கொமடோர் ஒசிசினகாசெது யூபிஎடிஐகேஈ அவர்கள் தலைமையிலான குழு ​செவ்வாய்கிழமை (25) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

இராணுவத் தலைமையகத்தை வந்தடைந்த தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டனர்.

தூதுக்குழுவின் தலைவர் எயார் கொமடோர் ஒசிசினகாசெது யூபிஎடிஐகேஈ,சிரேஷ்ட அதிகாரி சினிடுசிம்ப்ளிசியஸ் யுடிஇஎச், பிரதி பாதுகாப்பு பிரதி ஆலோசகர் கேனல் அபியோலா ஒலன்ரெவாஜு சலாமி, மற்றும் சிரேஷ்ட மாணவர் அதிகாரி கேனல் சஹீத் ஒலெக்கன் எஸ்ஏடிஐகியு ஆகியோர் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களுடனான சந்திப்பின் போது பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு பயிற்சி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துதல் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிகொண்டார்.

உத்தியோகபூர்வ சந்திப்பின் முடிவில், வருகை தந்த பிரதிநிதிகள் இராணுவத் தளபதியுடன் நல்லெண்ணம் மற்றும் நீண்டகால நினைவாக அடையாள சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

முதலாம் படை தளபதியும் பொது பணி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ மற்றும் பயிற்சி பணிப்பாளர் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.