Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2023 10:25:27 Hours

பாக்கிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி விருதில் இலங்கை பயிலிளவல் அதிகாரிக்கு 'வெளிநாட்டு தங்கப் பதக்கம்'

பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி விருது சனிக்கிழமை 29 நடைபெற்ற பயிலிளவல் அதிகாரி அணிவகுப்பின் போது, பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி இலங்கை இராணுவத்தின் பயிலிளவல் அதிகாரி பசிந்து தயானந்தாவுக்கு காகுலில் உள்ள பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மைதானத்தில் தங்கப் பதக்கம் வழங்கினார்.

பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் 147 வது பாடநெறி, 13 வது முஜாஹித் பாடநெறி, 66 வது ஒருங்கிணைந்த பாடநெறி, 6வது அடிப்படை இராணுவ பயிற்சி பாடநெறி மற்றும் 21 வது பெண்கள் பயிலிளவல் பாடநெறி ஆகியவற்றின் பயிலிளவல் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பு நிகழ்வு, பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி சையத் அசிம்முன்னிர் தலைமையில் நடைபெற்றது.

750 க்கும் மேற்பட்ட பயிலிளவல் அதிகாரிகள் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி -147, 13 வது முஜாஹித் பாடநெறி, 66 வது ஒருங்கிணைந்த பாடநெறி, 6 வது அடிப்படை இராணுவ பயிற்சி பாடநெறி மற்றும் 21 வது பெண்கள் பயிலிளவல் பாடநெறி ஆகியவற்றில் பாலஸ்தீனம், பஹ்ரைன், ஈராக் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகளும் பயிற்சி பெற்றனர்.

பாக்கிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தற்போதுய பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பாடநெறியை பின்பற்றும் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், புகழ்பெற்ற அழைப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நாள் கண்கவர் அணிவகுப்பைக் கண்டனர். இராணுவ மரியாதைகள், பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி இன் உரை மற்றும் வண்ணமயமான சம்பிரதாயங்களும் நிகழ்வில் இடம் பெற்றன.

அணிவகுப்பு மைதானத்திற்கு வந்த இராணுவ பதவி நிலை பிரதானி ஜெனரல் சையத் அசிம்முனீர் அணிவகுப்பை மதிப்பாய்வு செய்து, புகழ்பெற்ற பயிலிளவல் அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுவதற்கு முன்பு பயிவிளவல் அதிகாரிகளால் வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டது. வளாகத்திற்கு வந்த அவரை பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி தளபதி அவர்களால் வரவேற்கப்பட்டார்.

இலங்கை இராணுவத்தின் பயிலிவல் அதிகாரி பசிந்து தயானந்தாவிற்கு இராணுவ பதவி நிலை பிரதானி குழுவின் தலைவரால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டதுடன், கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட பயிலிளவல் அதிகாரி அப்துல்லா பின் தாரிக்கிற்கு கௌரவ வாள் வழங்கப்பட்டது. வுடுகை அணிவகுப்பின் போது பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி -147 இன் சிரேஷ்ட பயிலிளவல் அதிகாரி அலி அமீருக்கு ஜனாதிபதி தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி 13 வது முஜாஹித் பாடநெறியி்ன் பயிலிளவல் அதிகாரி முஹம்மது அட்னான் முனாவருக்கு சிறப்பு கோல் வழங்கப்பட்டது.

பாக்கிஸ்தான் இராணுவப் பயிற்சியின் முதன்மை இடமான பகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததற்காக பாகிஸ்தான் இராணுவ பதவி நிலை பிரதானி சித்தியடைந்த பயிலிளவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.