Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 20:55:28 Hours

கங்காராம வெசாக் வலயத்தில் பங்குபற்றியவர்களுக்கு பணப்பரிசு

கங்காராம 'புத்த ரஷ்மி வெசாக் வலயத்தில்' ஆக்கப்பூர்வமான வெசாக் கூடுகள், அலங்காரங்கள் மற்றும் பக்தி கீதம் ஆகியவற்றை வழங்கியவர்களுக்கு பண பரிசு மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (7) மாலை தேரர்கள் உட்பட சிறப்பு அழைப்பாளர்களின் ஒன்றுகூடலுக்கு மத்தியில் இடம்பெற்றது. அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் திரு.சமன்ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் பிரியந்த பெரேரா, மற்றும் அரச உயர் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முப்படையினர், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பொலிஸாரினால் வடிவமைக்கப்பட்ட ‘புத்த ரஷ்மி வெசாக் வலய’ அலங்காரங்கள், பக்தி கீதம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக வியாழன் (4) முதல் ஞாயிற்றுக்கிழமை (7) வரை தொடர்ந்தும் நான்கு நாட்களாக இடம் பெற்றது. இவ் வெசாக் வலயத்தை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஞாயிற்றுக்கிழமை (7) மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் இராணுவத்தினரால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இராணுவ இசைக்குழு மற்றும் ஆக்கப்பூர்வமான அலங்காரங்களில் இராணுவப் பாடகர்கள் வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்களுக்கான போட்டிகளில் இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஆறாவது இடத்தைப் பெற்றனர். அவற்றில், மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினரால் வடிவமைக்கப்பட்ட ‘அபாய’ (நரகம்) வெசாக் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமான ஈர்ப்பாக இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அன்னதானம் வழங்கும் இடத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், பக்தி கீதம், மின் அலங்கார கூடுகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பணபரிசுகளை வழங்கினார்.

கங்காராம விகாரையின் வண. (கலாநிதி) கிரிந்த அஸ்ஸாஜி தேரர், 'புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின்' வெற்றிக்கு பங்களித்த அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் தனது சொற்பொழிவின் போது ஆசிர்வாதம் வழங்கினார்.