Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th May 2023 06:25:13 Hours

தென் நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பில் 603 முல்லைத்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

643 வது காலாட் பிரிகேட்டின் சிவில் அலுவல்கள் ஒருங்கிணைப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடிப்படையில், முல்லைத்தீவு மூன்று பாடசாலைகளில் கல்வி கற்கும் 603 பிள்ளைகளுக்கு 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான பயிற்சிப் புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

643 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மஹரகம ‘லக்தன’ பெக்பெஞ்ச் ஊடக வலையமைப்பைச் சேர்ந்த திருமதி திலினி அத்துகோரள மற்றும் அவரது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அந்த நிதியுதவி வழங்கப்பட்டது.

64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்டிடபிள்யூகேஎன் ஈரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 643 வது காலாட் பிரிகேட் தளபதி சிடி விக்ரமநாயக்க டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ,மற்றும் 8 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்எச்எம்டிஜேபீ ஹேரத் ஆகியோர் விநியோக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இடது கரை முத்துஐயன்கட்டுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற விநியோக நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அதற்கமைய முத்துஐயன்கட்டுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (இடதுகரை), முத்து விநாயகபுரம் ஆரம்ப பாடசாலை, முத்துஐயன்கட்டுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (வலதுகரை) ஆகிய பாடசாலைகளில் 603 மாணவர்களுக்கு இராணுவத்தினரால் இவ் உதவி வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதான நன்கொடையாளர் திருமதி திலினி அத்துகோரள, துணுக்காய் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு பிரதீப் ஆனந்தன் மற்றும் மூன்று பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.