Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2023 16:39:08 Hours

தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயார்

விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை ஒழித்து, அனைவரும் நிம்மதியாக வாழ வழிவகுத்த இராணுவ வீரர்கள் (23,962), கடற்படை (1161), விமானப் படை (443), 2598 பொலீஸார் மற்றும் 456 சிவில் பாதுகாப்புத் திணைக்கள வீரர்கள் என மொத்தம் 28,620 வீரர்கள் இன்னுயிரை தியாகம் செய்து 14 ஆண்டுகள் ஆகின்றன. 2009 மே 18 மாலை வேளையில், நந்திக்கடலில் துப்பாக்கிகள் மௌனமாகி, 35 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தை ஆட்டிப்படைத்த பயங்கரவாதத்திலிருந்து நாடு விடுதலை பெற்றது.

அதேபோன்று, விடுதலைப் புலிகளுக்கெதிராக துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய 24,814 போர்வீரர்கள் நிரந்தர ஊனமுற்றோர் ஆனார்கள், அவர்களில் சிலர் இன்றும் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் நலன் விடுதிகளில் மீட்பு மற்றும் புனர்வாழ்வில் உள்ளனர்.

பத்தரமுல்ல போர் வீரர் நினைவுத்தூபியில் இடம்பெற்ற வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தின நிகழ்வின் போது அனைத்துப் போர்வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மே 19 ஆம் திகதியை தேசிய போர்வீரர் தினம் (வெற்றி தினம்) என அர்ப்பணித்துள்ளது.

கௌரவ ஜனாதிபதி, சபாநாகர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, பெலிஸ்மா அதிபர், சிவில் பாதுபாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவை அதிகார சபை தலைவர், உயிரிழந்த போர் வீரர்களின் மணைவிமார், பெற்றோர் மற்றும் பிள்ளைகள், மற்றும் அனைத்து நிலையினர் வௌ்ளிக்கிழமை (மே 19) மலர் அஞ்சலி செலுத்தினர்.