Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th May 2023 18:00:13 Hours

தேசிய போர்வீரர் தினத்தில் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நிலை உயர்வு

முப்படைகளின் சேனாதிபதியான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோரின் பரிந்துரைகளுக்கமைவாக 14வது வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தினத்தில் இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படையணிகளின் 402 அதிகாரிகளுக்கும் 3348 சிப்பாய்களுக்கும் நிலை உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 7 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 19 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 29 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 33 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும், 09 மேஜர்கள் தற்காலிக லெப்டினன் கேணல் நிலைக்கும், 115 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 3 கெப்டன் (வழங்கல்) மேஜர் (வழங்கல்) நிலைக்கும், 97 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் மற்றும் 90 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் (நிரந்தர மற்றும் தொண்டர்) 2023 மே 19 நிலை உயர்வு பெற்றுள்ளனர்.

சிப்பாய்களின் மொத்தம் நிலை உயர்வு பெற்றவர்களில், 129 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் - II அதிகாரவாணையற்ற அதிகாரிகள் - I நிலைக்கும், 332 பதவி நிலை சாஜன்கள் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் II நிலைக்கும், 442 சாஜன் பதவி நிலை சாஜன் நிலைக்கும், 585 கோப்ரல் சாஜன் நிலைக்கும், 1028 லான்ஸ் கோப்ரல் கோப்ரல் நிலைக்கும், 832 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் நிலை உயர்வு பெற்றுள்ளனர், இந் நிலை உயர்வு 2023 மே 19 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது