Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd May 2023 21:43:15 Hours

ஓய்வுபெறும் இயந்திர காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ தளபதியின் வாழ்த்து

தாமரை தடாகத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான இயந்திர காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் எல்எஸ் பாலச்சந்திர ஆர்எஸ்பீ அவர்கள் ஓய்வு பெறுவதை முன்னிட்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டீயூ அவர்களை திங்கட்கிழமை (22) அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

இச் சந்திப்பின் போது இராணுவத் தளபதி, அவரது மதிப்புமிக்க சேவை, அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றியதற்காக அவரைப் பாராட்டினார்.மே 2009 க்கு முன்னர் காலாட்படை அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது முக்கிய பங்களிப்பு வழங்கினர். ஓய்வு பெற்றவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் செயல்கள் தொடர்பாக நினைவுகூறினார்.

35 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் எல்எஸ் பாலச்சந்திர ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, தாமரை தடாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது தளபதி தனக்கு வழங்கிய வழிகாட்டலுக்கும் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் பல கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி, தாய்நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி அதேநேரத்தில் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டீயூ அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் எல்எஸ் பாலச்சந்திர ஆர்எஸ்பீ அவர்கள் 1987 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்தார். பாடநெறி-29 இல் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன்ட் நிலையில் கஜபா படையணிக்கு நியமிக்கப்பட்டார் , பின்னர் அவர் இயந்திர காலாட் படையணிக்கு இணைக்கப்பட்டார். அவர் 04 பிப்ரவரி 2023 ம் திகதி மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது தாமரை தடாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்து வந்தார். படைப்பிரிவுத் தளபதி, குழு கட்டளையாளர், இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் குழு கட்டளை அதிகாரி, 534 வது காலாட் பிரிகேட் மேஜர், 21 வது காலாட் படைப்பிரிவின் (வழங்கல் மற்றும் பராமரிப்பு) பதவி நிலை அதிகாரி 2 , 3 வது இயந்திர காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, இயந்திர காலாட் படையணியின் நிலைய தளபதி, இராணுவ வழங்கல் பாடசாலையின் பதவி நிலை அதிகாரி 1, 55 காலாட் படைபிரிவின் தளபதி, 653 காலாட் பிரிகேட்டின் தளபதி மற்றும் இயந்திர காலாட் பிரிகேட் தளபதியாவும் கடமையாற்றினார்.

போரின் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சூர பதக்கம்’ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் எல்எஸ் பாலச்சந்திரா ஆர்எஸ்பீ அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் கற்கைகளை முடித்துள்ளார், அவையாவன குழு கட்டளை அதிகாரி பாடநெறி, படையணி சமிக்ஞை அதிகாரிகள் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவு பயிற்சி, இளம் அதிகாரிகள் பாடநெறி (பாகிஸ்தான்), கனிஸ்ட கட்டளை பாடநெறி (இந்தியா), ஐக்கிய நாட்டு இராணுவக் குழு அதிகாரிகள் பாடநெறி (இந்தியா) மற்றும் காலாட் படையலகு பாடநெறி, படையலகு கட்டளை பாடநெறி (சீனா) போன்றவை ஆகும்.