Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st June 2023 20:37:48 Hours

ஓய்வுபெறும் கவச வாகன படையணியின் சிரேஷ்ட அதிகாரிக்கு சேவை நலன் பாராட்டு

ஓய்வுபெறும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவசப் வாகன படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்குப் பின்னர் ஓய்வு பெறுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அழைப்பின் பேரில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (1) இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

சிரேஷ்ட கவச வாகன படையணி அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் தன்னலமற்ற செயல்பாட்டிற்காக பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் நிறைவின் போது ஓய்வு பெறுபவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் கடமைகள் தொடர்பாக கருதுக்களை பகிர்ந்து கொண்டார்.

மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பதிலுக்கு இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் கவச வாகன படையணி தளபதியாக செயல்படுவதற்கு தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தாய் நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதேவேளை, சவாலான காலக்கட்டத்தில், சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி அதே நேரத்தில் பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 02 பெப்ரவரி 1988 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டதுடன், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சி பாடநெறி 29 யை பெற்றுக் கொண்டதுடன், இலங்கை கவச வாகன படையணிக்கு நியமிக்கப்பட்டார். அவர் 28 ஜனவரி 2021 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார். அவர் ஓய்வுபெறும் போது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாகவும், இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியாகவும் பதவி வகித்தார்.

அவர் 3வது கவச வாகன படையணியின் படைக்குழு தலைவராவும், 1வது கவச வாகன படையணியின் படைக்குழு தலைவராகவும், மறைந்த லெப்டினன் ஜெனரல் டிஎல் கொப்பேகடுவ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களது உதவி அதிகாரியாகவும். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிற்றுவிப்பாளராகவும், 5 வது இலங்கை கவச வாகன படையணியின் நிறைவேற்று அதிகாரியாகவும், 5 வது இலங்கை கவச வாகன படையின் இரண்டாம் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கவச வாகன படையணியின் பதவி நிலை அதிகாரி-2, 3 வது இலங்கை கவசப் படையணியின் குழு அதிகாரியாகவும், இலங்கை கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளராகவும், 6வது இலங்கை கவச வாகன படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரியாவும் நியமனம் வகித்துள்ளார்.

ஹைட்டி ஐக்கிய நாடுகளின் இயந்திரவியல் படைக்குழுவின் கட்டளை அதிகாரியாவும், நான்காவது இலங்கை கவச வாகன படையின் இரண்டாம் கட்டளை அதிகாரியாவும், 4 வது, 6 வது மற்றும் 1 வது இலங்கை கவச வாகன படையணிகளின் கட்டளை அதிகாரியாவும், திட்டமிடல் பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (திட்டம்), பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் கேணல் பயிற்சி, இராணுவ செயலகத்தின் கேணலாகவும், 112 வது காலாட் பிரிகேடின் தளபதி, இராணுவ செயலக கிளையின் உதவி இராணுவ செயலாளர் மற்றும் 2 ஆகவும், ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஆலோசகராகவும், இலங்கை இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி, 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இராணுவச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூர பதக்கம்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளைப் பின்பற்றியுள்ளார். அதில் படையலகு பாதுகாப்பு பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பதவி நிலை பாடநெறி, பரந்த பாதுகாப்பு சூழல் பாதுகாப்பு முகாமை பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, வானொலி பயிற்றுவிப்பாளர் பாடநெறி - பாகிஸ்தான், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவி நிலை பாடநெறி - பங்களாதேஷ், போர் குழு கட்டளை பாடநெறி- இந்தியா, சிரேஷ்ட கட்டளை பாடநெறி – இந்தியா, உயர் பாதுகாப்பு நோக்குநிலை பாடநெறி - இந்தியா, பாதுகாப்பு நிலைத்தன்மை மற்றும் மறுசீரமைப்பு பாடநெறி – அமெரிக்கா, போன்ற பாடநெறிகளையும் பின்பற்றியுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அபிவிருத்தி கற்கை மற்றும் சர்வதேச உறவுகள் கற்கைகளில் முதுகலைப் பட்டமும், பங்களாதேஷ் தேசியப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்பு கற்கை பட்டமும் மற்றும் களனி பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்புக் கற்கைகள் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.