Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2023 18:46:50 Hours

இந்திய விமானப்படை தளபதி, இராணுவத் தளபதியை சந்திப்பு

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி அவர்கள் புதன்கிழமை (3) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

இராணுவத் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட முறையான இராணுவ மரியாதையுடன் அவர் வரவேற்கப்பட்டார், வருகை தந்த விமானப்படைத் தளபதியை இராணுவ நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களினால் வரவேற்கப்பட்டதுடன்,அவருக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

வருகை தந்த இந்திய விமானப்படையின் தளபதியை, இராணுவத் தலைமையகத்தின் முதன்மைப் பணிநிலை அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதியினால் பிரதான கட்டிடத்தின் நுழைவாயிலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளும், வருகையை நினைவு கூறும் வகையில் விமானப்படைத் தளபதியுடன் குழுப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, அவர் தளபதி அலுவலகத்திற்கு முறையாக அழைக்கப்பட்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினுடனான சந்திப்பின் போது, இலங்கை இராணுவம் மற்றும் இந்திய விமானப்படை ஆகிய இருதரப்பு விடயங்கள் குறித்தும் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய விமானப்படை தளபதி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார். மேலும் பிராந்தியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு வருகை தந்தமைக்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி, இராணுவத் தளபதி அலுவலகத்தில் உள்ள அதிதி பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவு செய்தார்.

அவர் வெளியேறுவதற்கு முன், இரு இராணுவத் தலைவர்களும், எதிர்காலத்திலும் தங்கள் புரிதலையும் நல்லெண்ணத்தையும் தொடர உறுதியுடன் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட், மற்றும் தூதுக்குழுவின் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.