Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2023 20:34:39 Hours

மேற்கு படையினரால் 130 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இலவசமாக வழங்கல்

வெயாங்கொடை ததகமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் 130 மாணவர்களிடையே ரூபா.488,000.00 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய எழுதுபொருட்கள் உட்பட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 141 வது பிரிகேடின் 6 வது கள இலங்கை பீரங்கி படையினரின் ஒருங்கிணைப்பில் 24 ஜனவரி 2023 அன்று இடம்பெற்றது.

141 வது பிரிகேட் மற்றும் 6 வது கள இலங்கை பீரங்கி படையணியின் வேண்டுகோளுக்கு இணங்க அனுசரணையாளர்கள் குழு அந்த மாணவர்களின் வறிய நிலையைக் கருத்தில் கொண்டு அந்த கல்வி ஊக்குவிப்புகளை வழங்கியது. 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பந்துல காரியவசம் அவர்களின் அனுசரணையுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா அவர்களின் மேற்பார்வையில் இந்த சமூக நல செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன, 141 வது காலாட் பிரிகேட் தளபதி, வலய கல்வி அதிகாரிகள், அதிபர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.