Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2023 23:44:42 Hours

கோனகல பாடசாலை மாணவர்களுக்கு புலமைபரிசில் மற்றும் ஊக்கத்தொகை வழங்கல்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைப்பிரிவின் 241 வது காலாட் பிரிகேடின் 16 வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினர் அம்பாறை கோனகல பாடசாலைக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 17) புலமைப்பரிசில்கள், எழுதுபொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கினார்.

இராணுவத்தில் சேவையில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சேவையில் இருந்து வெளியேறி லான்ஸ் கோப்ரல் எஸ்.சோமதிலக கம்பஹா பிரதேசத்தில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து 450,000.00. ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். கோனகல பாடசாலையில் 100 மாணவர்களுக்கு மேற்கூறிய ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டதோடு இரண்டு மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் இதே சந்தர்ப்பத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 24 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் விபுல சந்திரசிறி மற்றும் 241 வது பிரிகேட் தளபதி கேணல் தனிக பதிரத்ன ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையுடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 241 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எச்.கே.குமாரசிறி கலந்து கொண்டார். 16 வது தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரியான மேஜர் கே.ஆர்.எம் அலவத்த ,அதிகாரிகள், சிப்பாய்கள், கோனகல பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.