Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th January 2023 23:42:00 Hours

முல்லைத்தீவில் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளை சந்திப்பு

பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் வடக்கிற்கான விஜயத்தின் புதன் கிழமை (ஜனவரி 25) முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டார். அதன் போது அவரது வாகன தொடரணிக்கு நுழைவாயில் படையினரால் மரியாதை வழங்கப்பட்டதுடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

தொடர்ந்து பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ரணசிங்க, 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம, 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நளின் ஜயவர்தன, 66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன், முல்லைத்தீவு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மற்றும் முல்லைத்தீவு பதவிநிலை அதிகாரிகளுடன் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பணிப்பாளர் நாயகம் 59 வது காலாட் படைப்பிரிவின் கீழ் இயங்கி வரும் நந்திக்கடல் படையலகு பயிற்சி பாடசாலைக்கு விஜயம் செய்துடன் அங்கு பயிற்சிபெறும் 9 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினருடன் கலந்துரையாடினார். பின்னர், அவர் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 68 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தையும் பார்வையிட்டார்.

நிகழ்வுகளின் இறுதியி்ல் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்கள் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார். அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார். செவ்வாய்கிழமை (24) அவர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மேற்கண்ட நோக்கத்திற்காக அனைத்து சிரேஷ்ட அதிகாரிகளையும் சந்தித்தார்.