Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2023 22:14:04 Hours

களனி விகாரையின் ‘பிங்கம’ தான நிகழ்வுக்கு படையினரின் ஆதரவு

களனி ராஜமஹா விகாரையில் வருடாந்த 'பிரித்' ஓதல் 1000 பிக்குகளுக்கு தானம் வழங்குதல் நிகழ்வுக்கு 144 வது காலாட் பிரிகேடின் 10 வது சிங்க படையணி, 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி, 2 வது (தொ) இலங் கை காலாட் படையணி, 18 வது தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 1 வது இலங்கை மகளிர் படையணியை சேர்ந்த சுமார் 200 படையினர் முழு ஆதரவை வழங்கினர்.

களனி இராஜமஹா விகாரை பீடாதிபதி வண. கொள்ளுப்பிட்டியே சங்கரக்கித தேரர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க படையினர் பிரித் ஓதுதல் அதனைத் தொடர்ந்து 1000 பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு தமது பங்களிப்பை வழங்கினர்.

இச் சமய நிகழ்வுக்கு கங்காரா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் அனுசரணை வழங்கியது. பலாங்கொடை பெலிஹுலோய சீலகம, சீலாசமாஹிதஆரண்யசேனாசனாயத்தின் அம டோர விவரவியசாதஹம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பிரதம புரவலருமான வண. பலாங்கொட ராதா தேரர் இரவு முழுவதும் ‘’பிரித்’’ ஓதினார்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா மற்றும் 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடிதுவக்கு ஆகியோர் இந் நிகழ்வினை உன்னிப்பாகக் க