Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th January 2023 18:30:47 Hours

'டான் புதியவிடியல்' காற்பந்தாட்ட போட்டி பரிகளிப்பு விழாவில் யாழ். தளபதி

எஎஸ்கே ஊடக (தனியார்) நிறுவனத்தின் தலைவர் திரு எஸ்எஸ் குகநாதன் அவர்களின் அழைப்பின் பேரில், “டான் புதியவிடியல்” காற்பந்து போட்டியின் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இப் போட்டியானது வருடம் தோறும் டான் தொலைக்காட்சி மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இறுதிப் போட்டியானது திங்கட்கிழமை (ஜனவரி 16) யாழ். அல்பிரட் துரையப்பா மைதானத்தில் காற்பந்து ரசிகர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

இப் போட்டி 2022 ஒக்டோபர் 29 முதல் 2023 ஜனவரி 16 வரை இடம் பெற்றதுடன் புனித மேரிஸ் காற்பந்து அணி சம்பியன் ஆனது. சம்பியன் மற்றும் வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றி கின்னம் மற்றும் பதக்கங்களை பிரதம அதிதி வழங்கினார்.

இப்போட்டியில் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி உதைபந்தாட்ட அணிகள் பல கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தின. இந்நிகழ்வில் சிவில் அழைப்பாளர்களும், ஏராளமான பார்வையாளர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இதேவேளை, யாழ். புனித ஹென்றிஸ் கல்லூரி மற்றும் அதனுடன் இணைந்த இளவாலை கன்னியர் மகாவித்தியாலயத்தின் அதிபர்களின் அழைப்பின் பேரில், யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட, புதன்கிழமை (ஜன. 18) புனித ஹென்றிஸ் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற வருடாந்த தடகளப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பங்கேற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் இளவாலை பீடாதிபதி அருட்தந்தை சி.ஜி.ஜெயக்குமார் உட்பட சிறப்பு அழைப்பாளர்கள், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அறிவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் றொபின்சன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.