Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th January 2023 05:10:24 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி 12 வது காலாட் படைப்பிரிவிற்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் ஜனவரி 12-13 திகதிகளில் 12 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

121 மற்றும் 122 வது காலாட் பிரிகேட், 20 வது இலங்கை சிங்கப் படையணி, 18 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 23 வது கஜபா படையணி முகாம்களுக்கு தளபதி விஜயங்களை மேற்கொண்டார்.

பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கு விஜயம் மேற்கொண்ட தளபதிக்கு அந்தந்த முகாம் வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பிரிகேட் தளபதிகள் மற்றும் படையலகு கட்டளை அதிகாரிகள் வருகை தந்த தளபதிக்கு அந்தந்த பகுதிகளில் தங்களின் வகிபங்கு மற்றும் பணிகள் குறித்து விளக்கினர். மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் அந்தந்த முகாம்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் நெருக்கமாக உரையாடியதுடன் அவர்களுடன் சில கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இந்த விஜயங்களுடன் இணைந்திருந்தனர்.