Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2023 20:05:21 Hours

பூகோள அரசியல் பிரச்சினைகள் தொடர்பான ‘உலகின் கதை’ என்ற நூல் வெளியீடு

பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத் எழுதிய 'உலகின் கதை’ எனும் பூகோள அரசியல் கூட்டணிகள் மற்றும் போட்டிகள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளது' என்ற புத்தகம் வியாழக்கிழமை (ஜனவரி 12) ரொக் ஹவுஸ் இராணுவ முகாமில் இடம் பெற்ற நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜிடிஎச் கமல் குணரத்ன (ஓய்வு) உட்பட முப்படை அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் கலந்துகொண்டார்.

கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் மூலோபாயக் கற்கைகள் பிரிவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹரிந்த விதானகே, அவர்கள் தலைமையுரை ஆற்றினார் மற்றும் பிரிகேடியர் ஸ்ரீ முதன்நாயக்க (ஓய்வு) சிறப்பு அதிதியின் உரையில் பூகோள அரசியல் கூட்டணிகள் மற்றும் துறையில் புதிய நூலின் விரிவான ஆய்வின் பல அம்சங்களை முன்னிலைப்படுத்தினார்.

நூலாசிரியர், கேணல் நளின் ஹேரத் தனது புதிய நூலின் முதல் பிரதிகளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜிடிஎச் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு.தனுஷ்க ராமநாயக்க, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு) , தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர (ஓய்வு), தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க (ஓய்வு) இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவன பணிப்பாளர் நாயகம் (பதில்) ரியர் அட்மிரல் திமுத்து குணவர்தன, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் பலருக்கு வழங்கினார்.

அரச அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக உறுப்பினர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.