Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th January 2023 19:58:00 Hours

முல்லைத்தீவு படையினர் தமிழ் மற்றும் சிங்கள ஏழை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடை

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப்பிரிவின் 593 வது காலாட் பிரிகேட்டின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் (1975 மற்றும் 80 பழைய மாணவர் பிரிவுகள்) 76 பேருக்கு பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கியது. கொக்கிளாய் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் கொக்கிளாய் சிங்களப் பாடசாலை ஆகிய இரண்டிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மாணவர்களுக்கு ஜனவரி 13 வெள்ளிக்கிழமை கொக்கிளாய் சிங்களப் பாடசாலையில் வைத்து இந் நன்கொடைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் இரு பாடசாலைகளிலும் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 7500/= பெறுமதியான பாடசாலை புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இரண்டு பாடசாலைகளிலும் மொத்தமாக 76 மாணவர்களிடையே ரூபா 570,000/= பெறுமதியான பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 59 வது படைப் பிரிவின் தளபதி மற்றும் 593 வது பிரிகேட் தளபதியின் வழிக்காட்டலுக்கமைய 19 வது கெமுனு ஹேவா படையணி படையினர் 5 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் படையினர் இணைந்து இந் நன்கொடை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

அனுசரணை வழங்கும் கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (குழு 75 மற்றும் குழு 85) பிரதிநிதிகள், அதிபர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.