Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2022 21:30:23 Hours

இராணுவத்தினரின் பங்களிப்புடன் நாடு முழுவதும் நத்தார் பண்டிகை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள 57 வது காலாட் படைபிரிவின் 572 வது காலாட் பிரிகேட் படையினர் நத்தார் தினத்தன்று (டிசம்பர் 25) தருமபுரம் ‘நாமவாசி’ முதியோர் இல்லத்தின் 25 முதியோர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கினர்.

572 வது காலாட் பிரிகேட்டின் 6வது இலங்கை சிங்க படையணி மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் 572 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் துஷான் விமலசேன மற்றும் படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளைப் படையலகுகளில் பலர் கலந்துகொண்டனர்.

661 வது காலாட் பிரிகேட் படையினரால் பூநரின் புனித மரியால் தேவாலயத்தில் நத்தார் கரோல் நிகழ்விற்கு தங்கள் முழு ஆதரவையும் வழங்கினர். 661 வது காலாட் பிரிகேட்டின் படையினரால் 22 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் இணைந்து தேவாலய வளாகத்தை சுத்தப்படுத்தியதுடன், நத்தார் நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு தற்காலிக குடில்களை அமைத்து கொடுத்ததுடன் பக்தர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கினர்.

571 வது காலாட் பிரிகேட் படையினரால் நத்தார் தினத்தன்று திருக்கண்ணியர் விடுதியில் வசிக்கும் 33 சிறார்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கியதுடன், அந்த 33 சிறார்களுக்கும் பாடசாலை உபகரணங்களையும் வழங்கினர். 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத் அவர்கள் இந் நிகழ்விற்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 66 வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நளின் ஜயவர்தன அவர்கள் கலந்து கொண்டார். கனடாவில் வசிக்கும் அனுசரனையாளரான திருமதி பெனட் தோமஸ் அவர்கள் இந்த நிகழ்விற்கான அனுசரணையை வழங்கினார்.