Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2022 21:00:24 Hours

களனியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பால் மா வழங்கல்

பசுமை விவசாய நடவடிக்கை மையம், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், பிரதேச செயலகங்கள் மற்றும் பொன்டெரா இலங்கை கம்பனி லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கம்பஹா மாவட்ட களனி பிரதேச செயலகப் பிரிவில் மேலும் 114 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வியாழன் (டிசம்பர் 22) பால் மா பக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கு இணங்க பொன்டெரா இலங்கை கம்பனி லிமிடெட் நிறுவனத்தினரால் இப் பால் மா பொதிகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. அதற்கமைய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தலா இரண்டு பக்கெட்டுகள் வீதம் 228 மா பொதிகள் வழங்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல மற்றும் 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் படையினரால் கம்பஹா மாவட்டத்தில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. 141 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் பந்துல காரியவசம் அவர்கள் பிரதேசத்தின் கட்டளை அதிகாரிகள். அந்தந்த கிராமசேவை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இதே அனுசரணையாளர் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் இந் நிவாரணப் பொதிகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.