Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th December 2022 21:06:23 Hours

நத்தார் தினத்தினை முன்னிட்டு 1000 சிரார்களுக்கு பரிசில்கள்

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிவில் மற்றும் இராணுவ சமூகங்களுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது காலாட் படைப்பிரிவு படையினரால் பரிசுகள் மற்றும் இனிப்புகள் நத்தார் தினத்தன்று (டிசம்பர் 25) யாழ் குடாநாட்டில் உள்ள தேவாலயங்களுக்கு அருகில் உள்ள சிறு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) சந்தன விஜயசுந்தர மற்றும் 51 வது காலாட் படைபிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் மகேந்திர பெர்னாண்டோ அவர்கள் யாழ். குடா நாட்டில் கடமையாற்றிய காலத்தில் அவர்களின் கருத்தின் அடிப்படையில் இந் நன்கொடை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

51 வது காலாட் படைபிரிவின் கீழ் பணியாற்றும் அனைத்து பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 51 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர அவர்களால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பி்டதக்கதாகும்.

1000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ். படையினர் அவ் இடங்களுக்கு சென்று அவர்களுக்குப் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

யாழ். புனித மரியாள் பேராலயத்தில், யாழ் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் மற்றும் 51 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் மகிழ்ச்சியான சிறுவர்கள் முன்னிலையில் இவ்விநியோக நிகழ்வு இடம்பெற்றது.