Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st December 2022 11:28:38 Hours

இராணுவ பாடகர்களின் உணர்வுபூர்வான கரோல் கீதங்களுடன் நத்தார் தின நிகழ்வுகள்

எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டினை கொண்டாடும் வகையில் தமது சுகதுக்கங்களை பகிர்ந்து கொள்வதற்கும் நல்லெண்ணத்தினை மேற்படுத்த இலங்கை இராணுவம், செவ்வாய்க்கிழமை (20) நெலும் பொக்குன கேட்போர் கூடத்தில் தனது வருடாந்த நத்தார் கரோல் கீத நிகழ்வினை நடாத்தியது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ கிறிஸ்தவ மன்றத்தின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று முக்கிய மொழிகளிலும் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், சமாதானத்தின் இளவரசர் இயேசு கிறிஸ்துவுக்கு கூட்டுப்பாடல் பாடி அவரது பிறப்பை அறிவித்தனர். அது உலக அமைதி மற்றும் செழிப்புக்கான பிரார்த்தனையாகவும் காணப்பட்டது.

இந் நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ.என்டியு, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ்.செனரத் யாபா ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ.என்டியு, மற்றும் முன்னாள் தளபதிகள் என்போர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பாரியார் திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியின் பாரியார் திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, கடற்படைத் தளபதியின் பாரியார் திருமதி மாலா பெரேரா, விமானப்படைத் தளபதியின் பாரியார் திருமதி சாமினி பத்திரன, பொலிஸ் மா அதிபரின் பாரியார் திருமதி எஸ்.விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பாரியார் திருமதி உபேந்திரா லமாஹேவகே மற்றும் அழைப்பாளர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

‘நமக்காக ஒரு குழந்தை பிறக்கிறது’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கரோல் இசையில் இராணுவ பாடகர்களுடன் கொட்டாஞ்சேனை புனித ஜோசப் கல்லூரி மற்றும் குட் ஷெப்பர்ட் கன்னியர் மடம் ஆகியவற்றின் பாடகர்களும் கலந்து கொண்டனர். இராணுவ கிறிஸ்தவ மன்றத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எஸ்.எம் அபேசேகர ஆர்.எஸ்.பீ யுஎஸ்பீ, இராணுவ கிறிஸ்தவ மன்ற உறுப்பினர்கள், மற்றும் இராணுவ கிறிஸ்தவ மன்ற செயலாளர் மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எல்.எம் ரொட்ரிகோ ஆர்.எஸ்.பீ பீ.எஸ்.சி ஐ.ஜி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு இலங்கை இராணுவப் பாதிரியார் அருட்தந்தை (கலாநிதி) நோயல் டயஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

வண. அருட்தந்தை ஜூட் ஷர்மன் அவர்களின் நத்தார் செய்தியைப் படிப்பதன் மூலம் வருடாந்த சபையின் அன்றைய வழக்கமான நடவடிக்கைகள் ஆரம்பமாகியது. சிரேஷ்ட தனிப்பாடல் கலைஞர்கள், அனில் பாரதி மற்றும் சில முன்னணி கலைஞர்களின் பங்களிப்பு, அவர்களின் திறமைகள் சபையின் பாராட்டைப் பெற்றன.

"பெத்லஹேம் ப்யூர்", "நமோ மரியானே", "ஹோலி நைட்", "ஜிங்கிள் பெல்ஸ்", "சைலண்ட் நைட்" போன்ற பிரபலமான மற்றும் பண்டிகைகால கீதங்கள், இராணுவ பாடகர்களின் ஆதரவுடன், சிறப்பு விருந்தினர்கள் பண்டிகைகால வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பரிமாறிக்கொள்வதற்கு முன்பு கேட்போர் கூடத்தில் எதிரொலித்தது.