Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2022 20:30:01 Hours

கொமாண்டோ படையணி தலைமையகத்தில் புதிய நிர்வாக கட்டிடம் திறப்பு

கனேமுல்லையில் உள்ள கொமாண்டோ படையணி தலைமையகம் இன்று (19) காலை நடைப்பெற்ற விழாவின் போது வளாகத்தில் புதிய இரண்டு மாடி நிர்வாக கட்டிடத் தொகுதியை பெருமையுடன் திறந்து வைத்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டார்.

கொமாண்டோ படையணி படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.கே.ஜி.கே.யு ஞானரத்ன என்டிசி பீஎஸ்சி மற்றும் கொமாண்டோ படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கேகே ஆர்டபிள்யூபி தர்மவர்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆகியோர் புதிய அலுவலக வளாகத்திற்கு முன்பாக அன்றைய விருந்தினர்களை வரவேற்றனர்.

தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சி சிறப்புப் பதாகையை திரைநீக்கம் செய்தும், மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் நாட வெட்டி படையணி தலைமையக வளாகத்தில் கட்டிடத்தினை திறந்துவைக்க பிரதம அதிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் அலுவலக வளாகத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு, படையணி தலைமையகத்தில் அதன் பல்வேறு நிர்வாக செயல்பாடுகள் குறித்து விசாரித்தனர். புதிய இக்கட்டிடம் கொமாண்டோ படையணி நீண்டகாலமாக உணரப்பட்ட தேவையாக இருந்தது.

ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் புதிய அலுவலக வளாகத்திற்கு முன்பாக மரக்கன்றுகளை நாட்டியதுடன் குழு படம் எடுத்தல் மற்றும் கொமாண்டோ படையணி தலைமையக விருந்தினர் புத்தகத்தில் எண்ணங்களை பதிவிடுதல் என்பவற்றில் பங்குபற்றினர்.

மேஜர் ஜெனரல் ஏ.கே.ஜி.கே.யு.ஞானரத்ன என்.டி.சி பீ.எஸ்.சி அவர்களால் அன்றைய நிகழ்வுகளின் முடிவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர்க்கு சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ என்டியு , பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாப்பா ஆர்.டபிள்யூ.பீ ஆர்.எஸ்.பீ என்டியு சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இத்திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.