Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2022 06:29:31 Hours

ஓய்வுபெறும் இயந்திரவியல் காலாட் படையணி சிரேஷ்ட அதிகாரி சேவைக்கு பாராட்டு

இயந்திரவியல் காலாட் படையணியின் ஓய்வுபெறும் 66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஜே பிரியதர்ஷன ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ. அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 02) குடும்ப உறுப்பினர்களுடன் இராணுவத் தளபதி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

இராணுவத்தில் 33 ஆண்டுகளுக்கும் மேலாக போற்றத்தக்க சேவையாறற்றி ஓய்வுபெறும் தருவாயில் இருக்கும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியிடமிருந்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றார். இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்புமிக்க சேவையினை பாராட்டியதுடன், போர் நடவடிக்கைகளின் போது மறக்கமுடியாத நிகழ்வுகளையும் நினைவு கூர்ந்தார்.

இராணுவத் தளபதி அவர் பதவிக் காலத்தில் இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் மற்றும் இயந்திரவியல் காலாட் படையணி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் பாராட்டினார். இந்த சுமுக சந்திப்பின் போது ஓய்வு பெற்றவரின் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் முயற்சிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இக் கலந்துரையாடலின் போது லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நிகழ்வில் கலந்துகொண்ட குடும்ப உறுப்பினர்களைப் பாராட்டவும் அவர்களுடன் பேசவும் மறக்கவில்லை.

மேஜர் ஜெனரல் எஸ் ஜே பிரியதர்ஷன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ இராணுவத் தளபதியின் வழிகாட்டுதல் மற்றும் அவரது கடமைகளை நிறைவேற்ற ஊக்குவித்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலின் முடிவில் இராணுவத் தளபதி ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் எஸ் ஜே பிரியதர்ஷன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களுக்கு பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்தினருக்கு ஒரு சிறப்புப் பரிசையும் வழங்கினார்.

மேஜர் ஜெனரல் எஸ்.ஜே பிரியதர்ஷன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ 1989 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை இராணுவ நிரந்தர படையணியின் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், இரண்டாம் லெப்டினனாக 19 ஜனவரி 1991 இல் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டதுடன் 2007 பெப்ரவரி 04 அன்று இயந்திரவியல் காலாட் படையணி தொடக்கத்தின் போது அப்படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் தனது சேவையின் போது அடுத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட்டதுடன் 2022 அக்டோபர் 10 அன்று மேஜர் ஜெனரலாக நிலை உயர்வு பெற்றார்.

அவரது பதவிக் காலத்தில் அவர் குழு அதிகாரி, கட்டளை அதிகாரி, பொது பணி அதிகாரி 2, சூடான் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கையின் ஐக்கிய நாடுகளின் இராணுவப் கண்காணிப்பாளர், 4 வது கஜபா படையணி இரண்டாம் கட்டளை அதிகாரி, 2 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 4 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி, முதலாம் பிரிவு கட்டளை அதிகாரி, 14 வது காலாட் படைப்பிரிவு கேணல் பொதுப்பணி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14, 23 வது மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையக கேணல் பொதுப்பணி, 653 வது காலாட் பிரிகேட் தளபதி, இயந்திரவியற் காலாட் படையணி நிலைய தளபதி, இயந்திரவியற் காலாட் படை பிரிகேட் தளபதி, இராணுவ தலைமையக சொத்து முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் மற்றும் 66 வது படைப்பிரிவின் தளபதி என பொறுப்பு வாய்ந்த நியமனங்களில் பணியாற்றியுள்ளார்.

அவரது சேவையின் போது, அவர் மின்னேரியா காலாட் படை பயிற்சி பாடசாலையின் ஆயுத அதிகாரிகளின் பாடநெறி, மின்னேரியா காலாட் படை பயிற்சி பாடசாலையில் படையலகு தளபதி பாடநெறி, படையலகு பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி மற்றும் மதுரு ஓயா இராணுவப் பயிற்சியில் கண்காணிப்பாளர் பாடநெறி போன்ற பல உள்நாட்டு பாடநெறிகளைப் பயின்றுள்ளார். பாகிஸ்தானின் இளம் அதிகாரி பாடநெறி, மலேசியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் குடிமக்கள் பாதுகாப்புப் பாடநெறி (UNPOCC) மற்றும் இந்தியாவில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி உள்ளிட்ட வெளிநாட்டுப் பாடநெறிகளையும் அவர் பயின்றுள்ளார்.

2009 மே க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட வீர அர்ப்பணிப்புக்காக சிரேஷ்ட அதிகாரி ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் என்பவற்றினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.