Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2022 06:33:12 Hours

மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் சேவைக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடம் இன்று (2) மாலை யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கைப் பொறியியல் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஜிசிஎஸ்பி விஜயசுந்தர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்களின் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவையின் பின் ஓய்வு பெறுவதையிட்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி தனது குடும்ப உறுப்பினர்களுடன் தளபதி அலுவலகத்தை வந்தடைந்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி அவரது அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் பல்வேறு பொறுப்புகளை தவறாது அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற செயல்பாட்டிற்காக பாராட்டினார். லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவத்தின் பொறியியல் பிரிவின் வளர்ச்சிக்கு பங்களிப்பையும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் ஆற்றிய பணிகளையும் குறிப்பாக நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக அவர் ஆற்றிய சேவை மற்றும் குடாநாட்டில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது எனவும் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.ஜி.சி.எஸ்.பி விஜயசுந்தர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன் யாழ். பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக தனது அலுவலகத்தின் செயல்பாட்டில் தளபதி அவருக்கு எப்போதும் வழங்கிய சிறந்த வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில இனிமையான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலம் முழுவதிலும் குறிப்பாக சவாலான காலகட்டங்களில் தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக போர்க்களத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி பாராட்டினார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டுக்களையும் விசேட நினைவுச் சின்னம் மற்றும் குடும்பத்தினருக்கு விசேட பரிசில்களும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்ஜிசிஎஸ்பி விஜயசுந்தர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு 1987 ஜூலை 20 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்து இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி இலக்கம் – 28 ல் அடிப்படை இராணுவ பயிற்சியினை பயின்று இரண்டாவது லெப்டினாக இலங்கை பொறியியல் படையணியில் இணைந்துகொண்டார். அவர் 16 ஒக்டோபர் 2020 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக பதவி வகித்துள்ளார். இராணுவ கல்வியற் கல்லூரியில் படை கட்டளை அதிகாரி, நிறைவேற்று அதிகாரி, பயிற்சி அதிகாரி ஆகிய பதவிகளையும் 53 வது குழு அதிகாரி, 232 வது காலாட் பிரிகேடின் பிரிகேட் மேஜர், இலங்கைப் பொறியியல் படையணி தலைமையக பணிநிலை அதிகாரி 2, இரண்டாம் கட்டளை அதிகாரி, மேலதீக குழுக்கட்டளை அதிகாரி, ஹைட்டி ஐக்கிய நாடுகளின் பணி - பொதுப் பணிநிலை அதிகாரி 1 (செயல்பாடுகள்), 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி, யாழ். பாதுகாப்பு படை தலைமையக 11 வது கள பொறியியல் படையணி கேணல் பொதுப்பணி, இராணுவ தலைமையக ஊடக பணிப்பகத்தின் கேணல் ஊடகம், குகுலேகங்கா லயா பிரதம நிர்வாக அதிகாரி, 592 வது பிரிகேட் தளபதி, தேசத்தை கட்டியெழுப்பும் பணிக்குழு தளபதி, கள பொறியியல் படைப்பிரிவு, இராணுவ தலைமையக பொது பணி பணிப்பக பணிப்பாளர், பொறியியல் படைப்பிரிவு தளபதி, இராணுவ தலைமையக தலைமை களப் பொறியாளர் மற்றும் இலங்கை பொறியியல் படையணி படைத் தளபதி ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

அவரது சேவைக் காலத்தில், அலகு நிர்வாக பாடநெறி , சிரேஷ்ட தந்திரோபாயங்கள் மற்றும் முகாமை பாடநெறி, இளம் அதிகாரிகள் பாடநெறி - பாகிஸ்தான், இந்தியா பொறியியல் அதிகாரிகள் பூமி நகரும் மற்றும் கட்டுமானப் பாடநெறி, உட்பட பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாடநெறிகளை அவர் பயின்றுள்ளார். சுவிட்சர்லாந்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை மற்றும் இராணுவப் பாடநெறி, இந்தியாவில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி, இந்தியவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு முகாமை , சீனா தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் போன்ற வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.

போர்க்களத்தில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண சூர பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது.