Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th November 2022 21:01:32 Hours

நல்லிணத்துக்காக 65 வது படைப்பிரிவினால் சிங்கள இலக்கியத் தொகுப்புக்கள் தமிழில் மொழியில்

நீண்டகால பலனை நோக்கமா கொண்டு நல்லிணக்கத்திற்காக வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65 வது படைப்பிரிவு பிரதேசங்களில் கல்வி கற்கும் தமிழ் மொழி மாணவர்களுக்கு சிங்கள இலக்கியப் படைப்புகள் தொடர்பான அறிவை வழங்கும் பொருட்டு இத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

65 வது காலாட்படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்களின் கருத்தியல் வழிகாட்டுதலின்படி தென்னிலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற சிங்கள நாவலாசிரியர் மார்ட்டின் எழுதிய 4 நாவல்கள் மற்றும் சிறுகதைகள் மொத்தம் 100 பிரதிகள் மொழிபெயர்க்கும் திட்டம் கொழும்பில் உள்ள சாந்தி அறக்கட்டளையால் கிடைக்கப்பெற்ற அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

மல்லாவி, துணுக்காய், முழங்காவில், நொச்சிக்குடா, மடு ஆகிய பகுதிகளில் உள்ள 25 பாடசாலைகளுக்கு 50,000 ரூபா பெறுமதியான தமிழ் மொழி பெயர்ப்பு நூல்கள் விநியோகிக்கப்பட்டதுடன் இந் நிகழ்வு 65 வது காலாட்படைபிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.டி.யு.டி.குமாரவினால் ஒருங்கிணைக்கப்பட்டது.

சிங்கள இலக்கிய உரைநடை மற்றும் வசனங்களை மக்களிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கில் பிரதம அதிதியாக மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க கலந்து கொண்டு மல்லாவி மத்திய கல்லூரி அதிபரிடம் 2022 நவம்பர் 15 ஆம் திகதி குறித்த தமிழ் மாணவர்களுக்கான முதல் மொழிப்பெயர்பு பிரதிகள் பகிர்ந்தளிக்கும் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புனகரி உள்ள சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் துஷாந்தன் அவர்களினால் 'போதைப்பொருள் தடுப்பு' பற்றிய விரிவுரையும் நடைபெற்றது. மல்லாவி மத்திய கல்லூரியில் அதிபரின் நன்றியுரையுடன் இந் நிகழ்வு நிறைவுற்றது.

இதேபோன்று நவம்பர் 15-16 ம் திகதிகளில் துணுக்காய், முழங்காவில், நொச்சிக்குடா மற்றும் மடு பிரதேசங்களின் மாணவர்களுக்கு பிகிர்ந்தளிக்கும் நிகழ்வு அந்தந்த பிரிகேட்களின் படைப் அலகுகளுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. அந் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக 65 வது காலாட்படைபிரிவு தளபதி கலந்துகொண்டார்.