Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2022 19:02:13 Hours

திஸ்ஸமஹாராம வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் விநியோகம்

முன்னாள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய (ஓய்வு), முன்னாள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மஞ்சுலிகா ஜயசூரிய மற்றும் பல நன்கொடையாளர்கள் வழங்கிய நிதியுதவியில் திஸ்ஸமஹாராம பிரதேச செயலகத்திற்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

இப்பொதிகள் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெரும் 65 குடும்பங்களுக்கு இப்பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (6) பிரதேச செயலக வளாகத்தில் விநியோகிக்கப்பட்டது.

இத்திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஹம்பாந்தோட்டை 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், தலா 15000 ரூபாய் பெறுமதியான இவ் நிவாரண பொதிகள் விநியோகிக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜெனரல் ஜகத் ஜயசூரிய (ஓய்வு) திருமதி மஞ்சுலிகா ஜயசூரிய, மேஜர் ஜெனரல் மிஹிது பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர். 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர், 122 காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் என் குலசேகர மற்றும் இத்திட்டத்தின் எனைய நன்கொடையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் நன்கொடையாளர்களான ஜெனரல் ஜகத் ஜயசூரிய (ஓய்வு), திருமதி மஞ்சுலிகா ஜயசூரிய, மேஜர் ஜெனரல் மிஹிது பெரேரா, ஏனைய நன்கொடையாளர்கள் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். 122 வது காலாட் பிரிகேடின் 27 இராணுவத்தினர் விநியோகம் தொடர்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.