Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2022 13:03:12 Hours

வளங்களைச் சேமிக்கும் முகமாக செயல்திறன் மற்றும் சிக்கனத்திற்கான இராணுவ மொபைல் செயலிகள் அறிமுகம்

இலங்கை இராணுவ தகவல் தொழிநுட்ப பணிப்பகம் திங்கட்கிழமை (17) காலை நான்கு இராணுவ மொபைல் அப்ளிகேஷன்களை (தகவல் தொழில் நுட்ப முறைமை) நடவடிக்கைகள் பணிப்பகத்தில் அறிமுகப்படுத்தியதுடன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

காகிதப் பயன்பாட்டைக் குறைத்து இராணுவ நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் தகவல் தொழில்நுட்ப பணிப்பகம் இராணுவ போர்டல், எரிபொருள் முகாமைத்துவ அமைப்பு, கொள்முதல் செயல்முறை முகாமைத்துவம் ஆகிய நான்கு மொபைல் இணையதள பயன்பாடுகளை இராணுவத்தின் மென்மையான மற்றும் பயனுள்ள செயல்பாட்டிற்காக வடிவமைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு வலுசேர்க்கும் வகையில் வளங்களைச் செயற்படுத்தும் அமைப்பாக தனது நிலைப்பாட்டை பேணுவதற்கு இலங்கை இராணுவத்தின் முயற்சிகளில் இது மற்றுமொரு முக்கியமான படியாகும்.

இராணுவ இலத்திரனியல்-போர்டல் - மொபைல் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம், அனைத்து அதிகாரிகளும்மற்றும் சிப்பாய்களும் தங்கள் மாதாந்த ஊதியச் சீட்டில் உள்ள விவரங்களை விரைவாக அறிந்துகொள்ளாம். இது சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகத்துடன் இணைந்து செயற்படுகின்றது. இதன் மூலம் சம்பள சீட்டு அச்சிடுவதற்கும் அச்சு இயந்திரங்களை பராமரிப்பதற்கான ஆண்டுக்கு ரூ. 5 மில்லியன் செலவு இதன் மூலம் சேமிக்கப்படுகின்றது. இதில் மேலதிகமாக அனைத்து படையினருக்கும் இராணுவ நலன்புரி நிதியம், நலன்புரி பணிப்பகம் மற்றும் மருத்துவப் பதிவுகள்/நிலை தொடர்பான அனைத்து விவரங்கள் மற்றும் விசாரணைகளில் இருந்து விவரங்களைப் பெற்றுககொள்ளாம்.

போக்குவரத்து மற்றும் வழங்கள் பணிப்பகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய எரிபொருள் முகாமைத்துவ முறையானது இலங்கை இராணுவ சேவைப் படையணி, இலங்கை இராணுவ சேவைப் படையணி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்களில் தேவையான நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு இராணுவ நிறுவனத்திலும் மாறும் அறிக்கைகள் மற்றும் எரிபொருள் பயன்பாடு என்பவற்றினை அறிந்துகொள்வதற்கு உதவுகின்றது.

மேலும், திறமையான எரிபொருள் நிரப்புதலை உறுதி செய்வதற்காக வாகனங்களுக்கு QR குறியீட்டை அறிமுகப்படுத்த இராணுவம் எதிர்பார்க்கிறது. அதன்படி, எரிபொருள் பம்ப் இயக்குனர் மொபைல் சாதனத்தின் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகு எரிபொருளை நிரப்ப முடியும். இந்த முறை மூலம் போக்குவரத்து மற்றும் வழங்கள் பணிப்பகம் எரிபொருள் கூப்பன்களை அச்சிடுவதற்கான வருடாந்திர செலவினையும் இந்த அமைப்பின் மூலம் எரிபொருள் ஒதுக்கீட்டை சேமிக்க முடியும்.

கொள்முதல் செயல்முறையை மிகவும் வெளிப்படையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற போர் கருவி பணிப்பக பிரிவிற்கு ஒரு கொள்முதல் செயல்முறை மேலாண்மை அமைப்பு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போர் கருவி பணிப்பக கிளை வழங்குனர்கள் பற்றிய சரியான அறிக்கைகளைப் பெற முடியும்.

இதற்கிடையில், இராணுவ தலைமையகத்திற்கான அப்ளிகேஷன் போர்ட்டலைப் பயன்படுத்துவதன் மூலம், பல்வேறு கிளைகள் மற்றும் பணிப்பகத்தில் தகவல் தொழில்நுட்ப பணியகத்தின் மூலம் இராணுவம் பல மென்பொருள் தீர்வுகளை மேம்படுத்தியுள்ளது. அந்தந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து தீர்வுகளையும் அணுக, கிளை / பணிப்பகத்தின் தலைவருக்கு பொதுவான இணைப்பு அல்லது ஒரு போர்ட்டலை வழங்குவது சரியான நேரத்தில் தேவை. தலைமை பதவி நிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு பொறுப்பான அதிகாரியை நியமிப்பதன் மூலம் தங்கள் ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து அமைப்புகளையும் அணுகலாம்.

இந்த செயலிகள் அனைத்தும் இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களால் தலைமை சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்எம்எல்டீ ஹேரத் ஆர் எஸ்பி யுஎஸ்பி பிஎஸ்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீஎல்எஸ்டப்ளியூ லியனகே யுஎஸ்பி பிஎஸ்சி மேற்பார்வையின் கீழ் வடிவமைக்கப்பட்டது.

மொபைல் செயலி வெளியீட்டு நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜே கொடிதுவாக்கு ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி என்டியு, இலங்கை இராணுவத் தொண்டர் படை தளபதி மேஜர் ஜெனரல் டிஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பி என்டியு மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.