Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2022 08:45:29 Hours

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் படையினர்

கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றினால் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அழிவை ஏற்படுத்தி வருவதால் மோசமடையும் நிலைமையினை கட்டுபடுத்தவும் அவசர உதவியளிக்கவும் எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்ள நன்கு தயாராக இருக்குமாறு படையினருக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேடின் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் சனிக்கிழமை (15) மாலை வேளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களை மபிம மேற்கு, மபிம கிழக்கு, பட்டிவில, யடவத்தை மற்றும் டயகம ஆகிய பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இராணுவ படகுகளின் உதவியுடன் வெளியேற்றினர். இராணுவத்தின் 11 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் அவர்களை பாதுகாப்பாக அருகில் உள்ள கோயில்கள் மற்றும் பொது இடங்களில் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.

அதேபோன்று மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் 141 வது பிரிகேடின் 8 வது இலங்கை காலாட் படையணியின் படையினர் மாபிம மேற்கு, மாபிம கிழக்கு, பட்டிவில, யட்டவத்தை மற்றும் தியகம பகுதிகளில் வெள்ளம் காரணமாக இன்று தடைப்பட்ட பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர உதவிகளை வழங்கினர்.

144 வது பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படையினர் கொலன்னாவை பொது மைதானத்தின் எல்லை அண்மித்து பல மணித்தியாலங்களாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் முறிந்து விழுந்த பாரிய மரமொன்றை சனிக்கிழமை (15) அகற்றினர். மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மற்றும் 14 வது படைப்பிரிவின் தளபதி ஆகிய இருவரும் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய 144 வது பிரிகேட் தளபதி, நகர சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஊழியர்களின் உதவியுடன் பணியை மேற்கொண்டார்.

அதேபோன்று தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் 14 வது படைப்பிரிவின் 144 வது பிரிகேட் 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பாராளுமன்றத்தின் சார்ஜென்ட்டின் வேண்டுகோளின் பேரில் பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் மற்றும் தரைத்தளங்களில் நீர் உட்புகுவதை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.

இதேவேளை 142 வது பிரிகேட் தளபதியின் தலைமையில் 24 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் வெள்ளிக்கிழமை (14) மாலை கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசியதன் காரணமாக கொழும்பு - நெலும் பொக்குண மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கிற்கு முன்பாக கலாநிதி சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர வீதியில் வேரோடு சாய்ந்த மரமொன்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கொழும்பு மாநகர சபை தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் ஒரு அதிகாரி மற்றும் பத்து சிப்பாய்கள் இணைந்து மரத்தை அகற்றிய பின்னர் வீதியை சுத்தப்படுத்தினர். vமேலும், அங்குருவெல்ல தும்பலியத்த மண்சரிவு அனர்த்தத்தில் மீட்பு மற்றும் பின்தொடர்தல் நடவடிக்கைகள் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வருகையுடன் நிறைவு பெற்றுள்ளன.

(இவை தொடர்பான மேலதிக தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன)