Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2022 20:53:58 Hours

கோட்பாடுகள் மற்றும் பொது வெளியீடுகளின் முதல் பிரதிகள் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கி வைப்பு

இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி எண்ணக்கரு மற்றும் கோட்பாடு பணிப்பகத்தினால் தொகுக்கப்பட்ட இராணுவ முக்கியக் கோட்பாடுகள் மற்றும் பன்னிரெண்டு பொது பொதுப் பணியாளர் வெளியீடுகளின் முதல் பிரதிகள், இன்று காலை (11) 73 வது இராணுவ ஆண்டு விழாவின் ஒரு பிரிவாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜீ.டி.எச் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil அவர்களிடம் வழங்கப்பட்டது.

அன்றைய பிரதம அதிதியான ஜெனரல் ஜீ.டி.எச் கமல் குணரத்ன (ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhil அந்த தொகுப்புகளின் முதல் பிரதிகளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே RWP RSP ndu அவர்களிடமிருந்து இராணுவத் தலைமையகத்தில் நடைப்பெற்ற இந் நிகழ்வின் போது பெற்றுக்கொண்டார். இராணுவ கீஸ்டோன் கோட்பாடுகளின் வெளியீடுகளின் இலத்திரனியல் பிரதிகளும் ஒரே நேரத்தில் பிரதம அதிதியால் வெளியிடப்பட்டது.

நிகழ்வின் போது உரையாற்றிய ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவத் தளபதி மற்றும் ஆராய்ச்சி எண்ணக்கரு மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் அதிகாரிகளின் முயற்சியைப் பாராட்டியதுடன் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து எதிர்கால நிச்சயமற்ற தன்மைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இராணுவத்திற்கும் தேசத்திற்கும் சேவை செய்ய அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுத்தார்.

இந் நிகழ்விற்கு வருகை தந்த பிரதம விருந்தினர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரை பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே WWV RWP RSP psc, ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீ ட்ப்ளியு எ சேனவிரத்னே USP psc, ஆகியோர் வரவேற்றனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி ஜே கொடிதுவக்கு RWP RSP ndu, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.