08th October 2022 18:58:28 Hours
புதன்கிழமை (செப்டம்பர் 28) திருகோணமலை இராணுவ வழங்கல் பாடசாலையில் நடைபெற்ற உபகரண கட்டுப்பாட்டு அதிகாரவாணை பாடநெறி இல: 5 இல் கலந்துகொண்டவர்களுக்கு நிலைச் சின்னங்கள் வழங்கலோடு பாடநெறி நிறைவு பெற்றது.
இலங்கை இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த அறுபது (60) அதிகாரவாணையற்ற அதிகாரிகள் 2022 ஜூலை 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பாடநெறி இல-5 ஐ நிறைவுசெய்து, இராணுவ வழங்கல் பாடசாலையின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைச் சேர்த்து முகிழ்நிலை அதிகாரிகளாக தேர்ச்சி பெற்றனர். இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணியின் தகுதிவாய்ந்த மற்றும் பொருத்தமான தெரிவு செய்யப்பட்ட அதிகாரவனையற்ற அதிகாரிகளை உபகரண கட்டுப்பாட்டு அதிகாரவாணை அதிகாரியாக இந்த பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இராணுவ வழங்கல் பாடசாலையின் அணிவகுப்பு மைதானத்தில் சின்னங்கள் அணிவித்தல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் மேனக பெர்னாண்டோ கலந்து கொண்டார். வருகை தந்த பிரதம அதிதியை இராணுவ வழங்கல் பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் ஜீடிஎஸ் சில்வா அவர்கள் அன்புடன் வரவேற்றார்.
மேலும் இந்நிகழ்வில் முக்கியத்துவத்தை சேர்க்கும் வகையில், அனைத்து முகிழ்நிலை அதிகாரிகளுக்கும் பிரதம விருந்தினரால் நிலை அடையாளத்தினை குறிக்கும் வகையில் கோல்கள் வழங்கப்பட்டன. மேலும், பாடநெறியில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் முகிழ்நிலை அதிகாரி டிஆர்வி விக்கிரமசிங்க அவர்களுக்கு அதே விழாவில் பிரதம அதிதியால் சிறப்பு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.