Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2022 12:44:50 Hours

இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறப்பு ஆராதனை

73 வது இராணுவ ஆண்டு விழா மற்றும் இராணுவ தினத்தை (ஒக்டோபர் 10) முன்னிட்டு பொரளை புனித கிறிஸ்தவ தேவாலயத்தில் திங்கட்கிழமை (3) பிற்பகல் சிறப்பு கிறிஸ்தவ சமய ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.

இராணுவக் கிறிஸ்தவ சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டிஜே கொடித்துவக்கு ஆர்டபிள்யுபி ஆர்எஸ்பி என்டியு, இராணுவ கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பி யுஎஸ்பி ஆகியோர் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அன்றைய பிரதம அதிதியை வரவேற்றனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் கொழும்பு உதவி பேராயர் மக்ஸ்வெல் சில்வா அவர்களினால் நடத்தப்பட்ட விசேட ஆராதனையில் இராணுவக் கொடி மற்றும் சகல படையணிகளின் கொடிகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்டது. அதேசமயம் அவர்களின் நாட்டிற்கான அர்ப்பணிப்பிற்காக தளபதிக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினர்.

அதன் பின்னர், உயிர் நீத்த போர்வீரர்கள் மற்றும் போரின் போது காணாமல் போனவர்களின் ஆன்மாக்களுக்காக அங்கு பிரார்த்தனை இடம்பெற்றதுடன், காயமடைந்த மற்றும் சிகிச்சைபெற்று வரும் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் ஒரே நேரத்தில் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

பாதிரியார்கள் அவர்களின் சுருக்கமான பிரார்த்தனை சொற்பொழிவுகளில் இராணுவத்தின் பாராட்டத்தக்க பணிகளை பாராட்டினர்.

நிகழ்வின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பொது மக்களிடையே ஆன்மீக விழுமியங்களை மேம்படுத்துவதற்காக தேவாலயத்தால் செய்யப்படும் அவர்களின் மத சேவைகளை பாராட்டும் முகமாக கிறிஸ்தவ மத தலைவர்களுக்கு நிதியுதவியை வழங்கினார்.

இராணுவ பதவி நிலை பிரதானி , இலங்கை இராணுவ தொண்டர் படை தளபதி, பிரதான பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் இந்த சமய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் முடிவில், இராணுவத் தளபதி 20 உலர் உணவுப் பொதிகளை நிகழ்வில் கலந்துகொண்ட வரிய குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினார்.