Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2022 11:44:50 Hours

ஓய்வுபெறும் விஜயபாகு காலாட் படையணி சிரேஷ்ட அதிகாரிக்கு இராணுவ தளபதியின் வாழ்த்து

விஜயபாகு காலாட் படையணியின் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஆர்ஏடீபி ரணவக்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ, அவர்கள் உபகரண பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதியின் அலுவலகத்திற்கு தனது குடும்ப உறுப்பினர்களுடன் செவ்வாய்க்கிழமை (4) வருகை தந்தார்.

இச்சந்திப்பின் போது இராணுவத் தளபதி, அவரது குறிப்பிடத்தக்க சேவை , அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற பல்வேறு பொறுப்புகளை ஆற்றியதற்காக அவரைப் பாராட்டினார். மே 2009 க்கு முன்னர் காலாட் படையணி அதிகாரியாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உச்சக்கட்டத்தின் போது ஓய்வு பெரும் அதிகாரியின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் பாத்திரங்களின் நினைவுகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

மேஜர் ஜெனரல் ஆர்ஏடீபீ ரணவக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ அவர்கள் 35 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய தனக்கு இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், தனது உபகரண பணிப்பாளர் நாயகமாக தனது அலுவலகத்தின் செயல்திறன்மிக்க சேவைக்கு தளபதி வழங்கிய வழிகாட்டலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில நினைவுகளை பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி தாய் நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவை இராணுவத் தளபதி அந்த நேரத்தில் பாராட்டினார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் ஆர்ஏடீபி ரணவக்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ அவர்களுக்கு பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச்சின்னமும் அவரது குடும்பத்திற்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஆர்ஏடீபி ரணவக்க ஆர்டபிள்யூபி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ அவர்கள் 16 மார்ச் 1987 இல் இலங்கை இராணுவத்தில் இணைக்கப்பட்டதுடன், பயிலிளவல் பாடநெறி இல. 28 இன் கீழ் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இரண்டாம் லெப்டினன் நிலையில் விஜயபாகு காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார். மேலும் அவர் 28 ஜனவரி 2021 அன்று மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது உபகரண பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியாக பதவி வகித்ததுடன், குழு கட்டளை அதிகாரி , அணி கட்டளை அதிகாரி, இரண்டாம் கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, கேணல் பொதுப்பணி, பிரிகேட் தளபதி, பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் படைப்பிரிவு தளபதி ஆகிய பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.